/indian-express-tamil/media/media_files/MPPfbblACAzTgwvz3sCA.jpg)
Trichy Power cur September 6 Saturday
திருச்சி: திருச்சியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் இல்லாத பகுதிகள்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த மின் தடையை கவனத்தில் கொள்ள வேண்டும்:
அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழக்கல்கண்டார்க்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர்.
கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், அரியமங்கலம் இன்டஸ்ட்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம், விண்நகர்.
மின் பராமரிப்பு பணிகள் மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி விரைவாக முடிந்து, மாலை 4 மணிக்கு மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.