க.சண்முகவடிவேல்
Trichy Power Cut: திருச்சி மின் வாரியம் சார்பில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின் வினியோகம் தடைபடும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு அரியமங்கலம், எஸ்.ஐ.டி., கல்லூரி, மேல அம்பிகாபுரம், கீழ அம்பிகாபுரம், ரயில் நகர், பொன்மலை, காட்டூர், நேருஜி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், மாஜி ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர்.நகர், சங்கிலியாண்டபுரம், மேலகல்கண்டார்கோட்டை, வெங்கடேஷ்வரா நகர், கொட்டப்பட்டு பகுதியில் அடைக்கல அன்னை நகர், சிட்கோ காலனி, திருநகர், நத்தமாடிப்பட்டி, கிழக்குறிச்சி, ஆலத்தூர், செந்தண்ணீர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருச்சி 33/11கே.வி. E.B.ரோடு துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 7ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் மணிமண்டப சாலை, காந்திமார்கெட், வெல்லமண்டி ரோடு, கிருஷ்ணாபுரம் ரோடு, சின்னகடைவீதி, N.S.B ரோடு, சூப்பர் பஜார், பெரியகடைவீதி (ஒரு பகுதி), மதுரம் மைதானம், பாரதியார் தெரு, பட்டவர்த் ரோடு, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, பாபு ரோடு, குறிஞ்சி கல்லூரி, டவுன்ஸ்டேசன், விஸ்வாஸ் நகர், A.P.நகர், லட்சுமிபுரம் மற்றும் உக்கடை ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஸ்ரீரங்கம் கோட்டத்துக்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை (அக்டோபர் 7ம் தேதி) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை சமயபுரம், மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், பாலையூர், வலையூர், கன்னியாக்குடி, ஸ்ரீபெரும்புதூர், மாருதிநகர், தாளக்குடி, கீரமங்கலம், அகிலாண்டபுரம், கூத்தூர், நொச்சியம், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“