Advertisment

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு- திருச்சியில் 11 பேர் மீது வழக்கு

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா்.

author-image
WebDesk
New Update
arrest jail

Trichy

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட 11 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisment

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதூா் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இதில் உரிய விதிமுறைகளை அலுவலா்கள் பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். இந்த வகையில் சுமார் 70 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக, லால்குடியைச் சோ்ந்த உதயகுமார் என்பவா், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பே வழக்கு தொடா்ந்திருந்தார்.

இதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, தவறிழைத்த அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு மீண்டும், கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது தொடா்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உள்ளிட்ட 11 போ் மீது வழக்கு பதிவு செய்தனா்.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் 2019 ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றி, தற்போது வேறு ஒன்றியங்களில் பணியாற்றி வரும், தொட்டியம் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணகுமார், புள்ளம்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், புள்ளம்பாடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமார், துறையூா் ஓவா்சியா் வெங்கடேஷ்குமார், முன்னாள் தொழில்நுட்ப உதவியாளா் கிளிண்டன், மண்ணச்சநல்லுார் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், புள்ளம்பாடி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பால்ராஜ், அந்தநல்லுார் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காளிதாஸ், இளநிலை பொறியாளா்கள் ரங்கநாதன், தாத்தையங்கார்பேட்டை பரணிதா், இவா்களுக்கு உடந்தையாக இருந்நதாக தனிநபா் தமிழ்செல்வன் ஆகிய 11 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக போலி ஆவணங்களை உருவாக்குதல், அரசுக்கு இழப்பு ஏற்படுத்துதல், கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தி: க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment