திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில்வே தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தும் ரயில்வே நிர்வாகத்தையும், மத்திய அரசையும் கண்டித்து சுமார் 4000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயத்திற்கு வித்திடும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்றையதினம் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/878db0eb-069.jpg)
மேலும், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 2004க்கு முந்தைய நிலைப்படி கடைசி சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துடன் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பஞ்சப்படி, ஓய்வூதியத்தில் 40 சதவீதம் கம்யூனிட்டேஷன் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பிறகும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர். எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு எஸ்.ஆர். எம்.யு துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார்.இந்த போராட்ட அறிவிப்பு ஆணை நேற்றைய தினமே திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“