Advertisment

திருச்சி கோட்டத்தில் ஓராண்டில் ரயில் வழித்தடத்தை கடக்க முயன்ற 230 பேர் மரணம் – மேலாளர்

திருச்சி கோட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரயில் வழித்தடத்தை கடக்க முயன்ற 230 பேர் மரணம்; 220 கால்நடைகளும் உயிரிழப்பு - கோட்ட மேலாளர் தகவல்

author-image
WebDesk
New Update
Trichy Railway campaign

திருச்சி கோட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரயில் வழித்தடத்தை கடக்க முயன்ற 230 பேர் மரணம் - கோட்ட மேலாளர் தகவல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ரயில்வே கேட் மூடி இருக்கும்போது தண்டவாளத்தை கடப்பது, கேட்டின் கீழ் பகுதியில் கடந்து செல்வது, கேட்டின் அருகாமையில் பயணிப்பது போன்ற செயல்களால் தொடர் விபத்து உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

Advertisment

இதனிடையே சர்வதேச ரயில்வே லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கோட்ட மேலாளர் எம்.எஸ் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியானது மத்திய பேருந்து நிலையம் சாலை, பாரதியார் சாலை வழியாக சென்று மீண்டும் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்தப் பேரணியில் சாரண, சாரணியர் இயக்கத்தினர், ரயில்வே திருச்சி கோட்ட அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கூடுதல் கோட்டமேலாளர் பி.கே செல்வன், ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று சென்றனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோட்ட மேலாளர் அன்பழகன் கூறுகையில்; திருச்சி கோட்டத்தில் 496 ரயில்வே லெவல் கிராசிங் உள்ளது. இதில் கடந்த ஓராண்டில் ரயில்வே கிராசிங்ல் 81 விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. விபத்து ஏற்படுத்தியவர்களிடம் இருந்து 8.76 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆளில்லா ரயில்வே கிராசிங் என்பது திருச்சி கோட்டத்தில் இல்லை. பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்ததன் விளைவாக ரயில்வே கிராசிங்கில் ஏற்படும் விபத்துக்கள் பெருமளவு குறைந்துள்ளது.

மேலும் திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் 220 கால்நடைகள் இருப்பு பாதையை கடந்து செல்லும் பொழுது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. அதேபோல் ரயில் பாதையைக் கடந்த 262 பேரில், 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை இருப்பாதை வழிதடத்தில் அதிகமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் 143 லெவல் கிராசிங் உள்ளது. திருச்சி ரயில்வே கோட்ட வழித்தடத்தில் ஆளில்லாத ரயில்வே கேட்டுகள் ஒன்றும் இல்லை. திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில்வே சட்ட விதிமுறைகளை மீறிய நபர்களிடமிருந்து 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் அபராதமாக கடந்த ஒரு வருடத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அன்பழகன் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Southern Railway
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment