திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது,பயணி ஒருவர் 6 சிலிண்டர் வடிவ உருளையில் தங்கத்தை மறைத்து அதை விளையாட்டு பொம்மை, ஜீப், கூண்டு ஆகியவற்றில் வைத்து கடத்தி வந்துள்ளார். அவர் கடத்தி வந்த தங்கத்தின் எடை 216.500 கிராம் அதன் மதிப்பு 12 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, துபாயிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்பொழுது ஒரு பயணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் சோதனை நடத்திய பொழுது உடலில் மறைத்து எடுத்து வந்த 902 கிராம் எடையுள்ள 53.48 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் குருவிகளாகச் செல்லும் பயணிகளிடமிருந்தும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“