Advertisment

சமயபுரம்: சாமி தரிசனம் பெயரில் கல்லா கட்டிய புரோக்கர்கள்… 28 பேருக்கு போலீசார் வலைவீச்சு

Trichy Samayapuram Amman temple Tamil News: திருச்சி சமயபுரம் கோயிலில் தரிசனம் செய்ய ரூ.1000, 500 என கரந்து லட்சக்கணக்கில் தினமும் சம்பாதித்து, 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy: Samayapuram Sami darshanam, brokers collect large sum of money

Arulmigu Mariamman Temple Samayapuram - Trichy

க.சண்முகவடிவேல்

Advertisment

சக்தி தலங்களில் பிரசித்தி பெற்றதும், திருச்சியின் அடையாளங்களில் ஒன்றானதுமான திருச்சி சமயபுரம் கோயிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் தினமும் வரும் பக்தர்களிடம் அங்குள்ள சில இடைத்தரகர்கள் அம்மனை விரைவாக தரிசிக்க ரூ.1000, 500 என கரந்து லட்சக்கணக்கில் தினமும் சம்பாதித்து வருகின்றனர். இதற்கு அந்தக் கோயிலில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் உடந்தையாக செயல்பட்டு வருவதால் பாமர மக்கள் அம்மனை தரிசிப்பதில் பெரும் கால தாமதமானது.

இதுகுறித்து பல்வேறு புகார்கள் அவ்வப்போது எழுந்த நிலையில், இதை கோயில் நிர்வாகமும் கண்டும் காணாத நிலையையே கடைபிடித்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் கோவிலை சுற்றித்திரிந்த இடைத்தரகர்கள் சிலர், பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு பின்வாசல் வழியாக கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த தடுத்த தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஆறுமுகத்தை இடைத்தரகர்கள் தாக்கியிருக்கின்றனர். இதனையடுத்து தனியார் பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக மாகாளிகுடியைச் சேர்ந்த தணிகைவேல் (வயது 44), சந்தோஷ் (23) ஆகியோரை சமயபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி நேற்று சமயபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கோவிலை சுற்றித்திரியும் இடைத்தரகர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து கோவிலின் பின்வாசல் வழியாக பக்தர்களை அழைத்து சென்றதாக சமயபுரம், மாகாளிகுடி, மருதூர், வி.துறையூர், சமயபுரம் அண்ணா நகர் பகுதிகளை சேர்ந்த 28 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இதனால் திருச்சி சமயபுரம்கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் இடத்திலும் புரோக்கர்கள் இடைமறித்து தினமும் பல்லாயிரக்கணக்கானோரிடமிருந்து பல லட்சங்களை கரந்து அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவது வெட்ட வெளிச்சத்திற்கு தற்போது வந்திருக்கின்றது.

Tamilnadu Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment