திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனம் -11, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனம் - 5 ஆக மொத்தம் 17 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற 01.02.2025-ம் தேதி காலை 09.30 மணியளவில் பொன்மலையில் உள்ள திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேற்கண்ட வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற 01.02.2025-ம் தேதிக்கு முன்னதாக பொன்மலை ஆர்மரிகேட் அருகில் திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் உள்ள ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும், வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான 01.02.2025ந் தேதி காலை 09.30 மணிமுதல் தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 2000/-முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வாகனங்களை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST தொகையையும், இரு சக்கர வாகனத்திற்கு 12% GST தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்டவாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்