scorecardresearch

திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்: கார் கண்ணாடி, பைக்குகள் உடைப்பு

திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Trichy Siva DMK MP House attacked Tamil News
திருச்சி சிவா வீடு மீது தாக்குதல்

Trichy Siva Tamil News: தி.மு.க மூத்த தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி) திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் இன்று காலை சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு திடல் திறக்கப்பட்டது. இதை அமைச்சர் நேரு திறந்து வைத்த நிலையில் இந்த திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு திருச்சி சிவா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அமைச்சர் நேருவின் காரை வழிமறித்துள்ளனர். கரை மறைத்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பதிலடியாக அமைச்சர் நேரு ஆதரவாளர்களாக கூறப்படும் சிலர் திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy siva dmk mp house attacked tamil news

Best of Express