ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் ஆளுநர்கள் ஆனதால் தான் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்று மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
யு.ஜி.சி புதிய விதிக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் வீதியில் இறங்கி போராட வேண்டும். பல்கலைக்கழகத்தை கட்டுவது, பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பது மாநில அரசு. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கா? என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல், இந்தியர்களை கைவிலங்கு போட்டு நாடு கடத்தப்பட்டதற்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் நாடு கடத்தப்படுவதாக தகவல் தெரிந்த உடன் ஒன்றிய அரசு என்ன செய்தது?என்றும், இந்தியர்களை கவுரவமாக அழைத்து வர ஒரு விமானத்தை இந்தியா அனுப்புவதை யார் தடுத்தது? என்றும் திருச்சி சிவா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக இன்று காலை டெல்லியில் நடைபெற்ற UGC வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் தமிழக எம்பிக்கள் கலந்துகொண்டு குரல் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்