மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி தேவை என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா, “சென்னையில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகளைக் கூட வழங்க முடியாத சூழல் நிலவுகிறது” என்றார்.
தொடர்ந்து, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அவர், தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஆரம்பக் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது.
இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் தண்ணீரில் மிதந்தன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் புயல் ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே கரையைக் கடந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“