தி.மு.க எம்.பி திருச்சி சிவா மாநிலங்களவையில் கூறிய உப்புமா கதை பா.ஜ.க-வினரை கோபமூட்டினாலும் சிரிக்க முடியாமல் சிரித்திருக்கிறார்கள். திருச்சி சிவா கூறிய இந்த நகைச்சுவை கதையைக் கேட்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் கலகலனு சிரித்தது கவனம் பெற்றுள்ளது.
தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவையில் நகைச்சுவையாகக் கூறிய உப்புமா கதை பா.ஜ.க ராஜ்ய சபா உறுப்பினர்களைக் கோபமூட்டினாலும் சிரிக்க முடியாமல் சிரித்திருக்கிறார்கள். இதனால், ராஜ்ய சபா உறுப்பினர்கள் கலகலனு சிரித்திருக்கிறார்கள்.
ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பற்றிய மோசடிகளை வெளியிட்டதில் இருந்து இந்தியாவின் அரசியல் களம் சூடாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக்கு பா.ஜ.க உரிய பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்நிலையில் அதானி மீதான புகார்கள் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது. இன்று நாடாளுமன்ற அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைளும் சில நிமிடங்கள் முடங்கியது.
மாநிலங்களவையில் அதானி பங்கு சரிவு மற்றும் ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது.
ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கு பின், அவையில் பேசிய தி.மு.க எம்,பி திருச்சி சிவா உப்புமா கதை ஒன்றைக் கூறி பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். திருச்சி சிவா கூறிய இந்த நகைச்சுவைக் கதை பா.ஜ.க உறுப்பினர்களைக் கோபமூட்டினாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால், திருச்சி சிவா கூறிய நகைச்சுவை கதைக்கு ராஜ்ய சபா உறுப்பினர்கள் கலகலவென சிரித்தார்கள்.
ராஜ்ய சபாவில் பேசிய தி.மு.க எம்.பி திருச்சி சிவா, ஒரு கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தினமும் உப்புமா போடுகிறார்கள். உப்புமா பிடிக்காத மாணவர்கள் எல்லாம் கொதித்து போய் உப்புமா வேண்டாம் என்று போராடுகிறார்கள். உப்புமா பிடிக்காத மாணவர்கள் எல்லாம் ஹாஸ்டல் வார்டனிடம் எங்களுக்கு தினமும் உப்புமா வேண்டாம் என்று முறையிடுகிறார்கள். உடனே வார்டன்.. சரி ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். நான் ஒரு லிஸ்ட் போடுகிறேன். அந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்தமான உணவுக்கு வாக்களியுங்கள். அதில் வெற்றிபெறும் பொருளை தேர்வு செய்யலாம். அந்த உணவை ஹாஸ்டலில் கொடுக்க சொல்கிறேன் என்று கூறுகிறார்.
இதையடுத்து வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த வாக்கெடுப்பில், 7 சதவிகிதம் மாணவர்கள் பிரெட் ஆம்லெட் வழங்க வாக்களிக்கிறார்கள். 13 சதவிகிதம் பூரி வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். 18 சதவிகிதம் மாணவர்கள் உருளைக்கிழங்கு பரோட்டா வழங்க கோரிக்கை வைக்கிறார்கள். 19 சதவிகிதம் மாணவர்கள் மசாலா தோசை வேண்டும் என்கிறார்கள் 20 சதவிகிதம் மாணவர்கள் இட்லி வேண்டும் என்று கேட்கிறார்கள். 23 சதவிகிதம் பேர் உப்புமா வேண்டும் என்று கேட்கிறார்கள். இதில் 23% பேர் உப்புமா வேண்டும் என்பவர்களே அதிகம் என்பதால் மீண்டும் உப்புமாவே ஜெயித்துவிடுகிறது. அதனால், மீண்டும் உப்புமாவை போடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள் என்று திருச்சி சிவா கூறினார்.
திருச்சி சிவா கூறிய இந்த கதையை மாநிலங்களவை சபாநாயகர் தன்கர் உள்பட அனைவரும் கூர்மையாக கவனித்து வந்தனர். உப்புமா கதை என்றதும் சிலர் சிரித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தனர். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, இந்த உப்புமா வென்றது போலத்தான் 2019-ல் பா.ஜ.க-வும் வென்றது. மாணவர்கள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் உப்புமா வென்றது போல எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பா.ஜ.க வென்றது. அது அடுத்த தேர்தலில் நடக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார்.” என்று திருச்சி சிவா உப்புமா கதையாக கூறியது பா.ஜ.க உறுப்பினர்களைக் கோபமூட்டினாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால், ராஜ்ய சபா உறுப்பினர்கள் கலகலவென சிரித்தார்கள்.
தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். அது நடக்க வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க வெல்வதை தடுக்க முடியும். நாங்கள் கை கோர்த்து வருகிறோம். இந்த ஆட்சி மூலம் நடந்தது எல்லாம் போதும். மக்கள் பட்ட கஷ்டங்கள் போதும். மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது போதும். சமூக நீதிக்கு எதிரான இந்த ஆட்சியின் நடவடிக்கைகள் போதும். மத உரிமைகளுக்கு எதிரான இந்த ஆட்சி நடந்தது போதும். தமிழுக்கு எதுவும் செய்யாமல் இவர்கள் இல்லாத சமஸ்கிருதம் மொழிக்காக உழைக்கிறார்கள். அதற்கு பணம் கொடுக்கிறார்கள். மாநில உரிமைகளை இவர்கள் முற்றாக குழி தோண்டி புதைத்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்சி போதும். இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது. இதோடு இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முடிவு கட்டும்” என்று திருச்சி சிவா பேசினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.