scorecardresearch

துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்பு: ரைபிள் கிளப்பில் தொடங்கி வைத்த திருச்சி போலீஸ் கமிஷனர் 

திருச்சி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் வீர்களுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பை திருச்சி ரைபிள் கிளப் தலைவரும் மாநகர காவல் ஆணையருமான எம்.சத்தியபிரியா தொடங்கி வைத்தார்.

Trichy: South Zone NRAI National Coaches Course launched by city Police Commissioner Sathiya Priya Tamil News
Tiruchirappalli Commissioner of Police Sathiya Priya addressing trainees in South Zone NRAI Tamil News

க.சண்முகவடிவேல்

திருச்சி கே.கே நகரில் அமைந்துள்ள மாநகர காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் திருச்சி ரைபில் கிளப் கடந்த 31-12-2021 அன்று தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொள்ள வசதியாக இங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும், திருச்சி ரைபிள் கிளப்பில் இந்திய தேசிய ரைபிள் கிளப்பின் தென் மண்டலம் சார்பில், துப்பாக்கி சுடும் வீரர்களின் பயிற்சியாளர்களுக்கு ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவில் பயிற்சி அளிப்பதற்குரிய ஒரு வார பயிற்சி வகுப்புகள் மே 21 நேற்று துவங்கி வரும் மே 27 வரை நடைபெறுகின்றது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளின் தொடக்க நிகழ்ச்சி திருச்சி ரைபிள் கிளப் வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி ரைபிள் கிளப் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான எம்.சத்திய பிரியா பங்கேற்று பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசியதாவது; “எந்தவொரு போட்டியாக இருந்தாலும் அதில் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதில் பயிற்சியாளரின் பங்கு முக்கியமானது. எனவே, பயிற்சியாளர்களுக்கான இந்த பயிற்சியில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் சிறப்பாக பயிற்சி பெற்று சிறந்த வீரர், வீராங்கனைகளை நாட்டுக்காக உருவாக்க வேண்டும்.

பல நாடுகளில் நடைபெறும் துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் நம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் வகையில் பயிற்சியளிக்க வேண்டும். நம் வீரர்கள் பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், திருச்சி ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர்செல்வன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்ககத்தின் மூத்த துணை தலைவர் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கத்தின் தலைவர் சீதாராமராவ், இன்திய ரைபிள் சங்க (என்ஆர்ஏஐ) இணை செயலாளர் மற்றும் கல்வி திட்ட இயக்குநர் பவன்சிங், பயிற்சியாளருக்கான கல்வி திட்டத்தின் அனந்த்முரளி, தகவல் தொடர்பின் பயிற்றுனர் இந்திரஜித்சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பங்கேற்றுள்ளனர். பயிற்சி வகுப்பில் பயின்று தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy south zone nrai national coaches course launched by city police commissioner sathiya priya tamil news