திருச்சி எஸ்.எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு: கேரளாவுக்கு விளையாட சென்றபோது சோகம்

திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் விளையாட சென்ற திருச்சி எஸ்எஸ்ஐ திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் விளையாட சென்ற திருச்சி எஸ்எஸ்ஐ திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
Kerala SI Death

Trichy

திருவனந்தபுரத்தில் தேசிய அளவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் விளையாட சென்ற திருச்சி எஸ்எஸ்ஐ திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

Advertisment

திருச்சி பொன்மலை அருகே கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (49). திருவெறும்பூர் உட்கோட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட நவல்பட்டு ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ-யாக பணியாற்றி வந்தார்.

இவர், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வரும் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க சென்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பிற்பகல் 12 மணியளவில் அவர் பங்கேற்று விளையாடினார். இதில் ராஜ்மோகனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment
Advertisements

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே ராஜ்மோகன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடல் கேரளா மாநிலம் பாளையம் மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. இறந்த ராஜ்மோகனுக்கு மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

கேரளாவுக்கு கூடைப்பந்து போட்டியில் விளையாட சென்ற எஸ்எஸ்ஐ உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்                      

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: