Advertisment

திருச்சி என்.ஐ.டி-யில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மன்னிப்பு கேட்ட வார்டன்: மாணவர்கள் போராட்டம் வாபஸ்

என்.ஐ.டி கல்லூரியில் விடுதி மாணவியிடம் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பந்தமாக என். ஐ.டி நிர்வாகத்தை கண்டித்தும், விடுதி வார்டனை கண்டித்தும் சக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

என்.ஐ.டி கல்லூரியில் விடுதி மாணவியிடம் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பந்தமாக என். ஐ.டி நிர்வாகத்தை கண்டித்தும், விடுதி வார்டனை கண்டித்தும் சக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரியில் விடுதி மாணவியிடம் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது சம்பந்தமாக என். ஐ.டி நிர்வாகத்தை கண்டித்தும், விடுதி வார்டனை கண்டித்தும் சக மாணவர்கள் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய இன்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் திருச்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.

திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி கல்லூரி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வியை பயின்று வருகின்றனர்.

அப்படி பயின்று வரும் மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும் வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வி பயின்று  வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் என்.ஐ.டி கல்லூரி மகளிர் விடுதியில் மின்சார பிரச்சனை குறித்து பழுது பார்ப்பதற்காக என்.ஐ.டி கல்லூரியின் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கும் முதுகுளத்தூரை சேர்ந்த காந்தி என்பவரின் மகன் கதிரேசன்  சென்றுள்ளார். 

அந்த விடுதியில் மாணவி ஒருவர் அறையில் தனியாக இருந்தது கண்ட கதிரேசன், மாணவியிடம் பாலியல் ரீதியாகவும் தகாத உறவுக்கும் முற்பட்டுள்ளார். 

இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியே ஓடி வந்ததோடு இச்சம்பவம் குறித்து சக மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளார்.

மேலும், தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த அந்த மாணவியின் தந்தை, இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து கதிரேசனை அதிரடியாக கைது செய்து நேற்று இரவு திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையும், விடுதி வார்டனின் பொறுப்பின்மையையும் கண்டித்து கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட அவலம்  குறித்த செய்திகள் கல்லூரி மாணவ மாணவிகளின் சமூக வலைதளங்களில் அதிரடியாக பரவியது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியின் நிர்வாகத்தை விடுதி வார்டனையும் கண்டித்து விடுதியின் முன் திரண்டு  விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதைத்தொடர்ந்து முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி கோபால் சந்திரன் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ மாணவியரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

Advertisment



ஆனால், அதையும் ஏற்காத மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள என் ஐ டி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் எனக்கூறி முழக்கமிட்டு அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் போலீசார் மாணவர்கள்போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லவில்லை என்றால் தங்களது பணியை செய்ய விடாமல் இடையூறு செய்ததாக கூறி வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்வோம் என மிரட்டி பார்த்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களது போராட்டத்தை தொடர் போராட்டமாகவும், என்.ஐ.டி. இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மாணவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது; மாணவிகளின் அறைக்கு ஒப்பந்த  ஆண் ஊழியர்களை வார்டன் அல்லது கல்லூரி அலுவலர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக அனுப்பி வைத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதனால், விடுதி காப்பாளர்கள் மூன்று பேரும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 

மேலும், அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகவும் கல்லூரி நிர்வாகம் நடத்தியதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இதனால் என் ஐடி கல்லூரி வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் என்ஐடி கல்லூரி மாணவ மாணவிகளிடம் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரும் கல்லூரி மாணவிகள் புகார் கொடுத்தால் வார்டன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் பேசிய சமூக பேச்சுவார்த்தையில், மாணவ மாணவிகளிடம் அவதூறாக பேசிய சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் பேபி என்பவர் காவல்துறை முன்னிலையில் மாணவ மாணவிகளிடம் தன் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருந்தாலும் கல்லூரி வாசலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என் ஐடி கல்லூரியில் விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர் கல்லூரி விடுதி வார்டனுக்கு தெரியாமல் இரண்டு நாட்களாக வெளியில் சென்று தனது ஆண் நண்பருடன் சுற்றிவிட்டு வந்தபோது அந்த மாணவி அப்பகுதியில் சென்ற ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல் 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment