ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட சுஜித் உடல்!

சிறுவனை உயிருடன் மீட்டிருந்தால் அனைவரும் மிகவும் மகிழ்ந்திருப்போம் – திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு

Trichy Sujith Wilson body retrieved from abandoned bore well
Trichy Sujith Wilson body retrieved from abandoned bore well

Trichy Sujith Wilson body retrieved from abandoned bore well : சுஜித் வில்சன் திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் தன் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழ்ந்துவிட்டான். 25ம் தேதி மாலை 25 அடிகளில் இருந்த அவனை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைய 88 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். அவனை காப்பாற்றுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு, தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடினார்கள். 28ம் தேதி இரவு முதல் ஆழ்துளைக் கிணற்றில் துர்நாற்றம் வீசத் துவங்கியதால், அவனைக் காப்பாற்ற 3 மீட்டர் தள்ளி தோண்டப்பட்டு வந்த சுரங்க வேலை கைவிடப்பட்டது.

மருத்துவக் குழுவினர் அந்த துர்நாற்றம் மரணத்தால் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்த பின்னர் 29ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் சுஜித் வில்சன் மரணமடைந்ததை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார் வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன். இறந்து போன சுஜித்தின் சடலத்தை மீட்க 15 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. மூத்த அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட அந்த குழுவில் தேசிய, மாநில மீட்புக் குழு வீரர்களும், தீயணைப்பு துறையினரும், மருத்துவர்களும் இடம் பெற்றனர்.

80 மணி நேரப்போராட்டம் உயிரை காக்க மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சுஜித்தின் மரணம் உறுதி செய்யப்பட்ட 20வது நிமிடத்தில் சுஜித்தின் உடல் 88 அடி ஆழத்தில் இருந்து சுஜித்தின் உடல் கயிறு மூலம் மேலே இழுத்து கொண்டு வரப்பட்டது. சுர்ஜித்தின் மரணம் உறுதி செய்யப்பட்ட பின்னரே சுரங்க பள்ளம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அவனை உயிருடன் மீட்டிருந்தால் அனைவரும் மிகவும் மகிழ்ந்திருப்போம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வருத்ததுடன் அறிவித்தார்.

மேலும் படிக்க : 80 மணி நேர போராட்டம் தோல்வி : சுஜித்தின் உடல் எவ்வாறு மீட்கப்பட்டது?

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Trichy sujith wilson body retrieved from abandoned bore well within 20 minutes by 15 members crew

Next Story
குமரிக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வு மண்டலம் !Chennai weather today holiday announced
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express