Advertisment

அண்ணாமலைக்கு எதிராக திருச்சி சூர்யா: ட்விட்டரில் பரபரப்பு கருத்து?

தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையின் பிம்பம் உடையும் என திருச்சி சூர்யா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
Trichy siva attacked annamalai?

தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை உடன் திருச்சி சூர்யா

தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்டுவந்தார். இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகி டெய்சியை தரக்குறைவாக பேசினார்.

இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து கட்சிக்காக பயணிப்பதாக கூறிவந்தார். மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை எனது உடன் பிறவா அண்ணன் எனப் பேசிவந்தார்.

தற்போது கு. அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், “அண்ணாமலையின் பிம்பம் உடையும் என ட்விட்டரில் திருச்சி சூர்யா கூறியதாக செய்திகள் பரவின. இதற்கிடையில் தற்போது, திருச்சி சூர்யா ட்விட்டர் கணக்கை தொடர்பு கொள்ள முடியவில்லை. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது என வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Surya Annamalai Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment