கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட சூர்யா சிவா, கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
Advertisment
பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் ஆபாசமாக வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ விவகாரம் குறி்த்து கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாத காலம் நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார்.
தொடர்ந்து சூர்யா சிவா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்தத அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
Advertisment
Advertisements
அதன்படி திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர், வெள்ளிக்கிழமை திருப்பூரில் பாஜக அலுவலகத்தில் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, நாங்கள் இருவரும் அக்கா, தம்பி போல, இனி சுமூகமாக தொடர்வோம் என்று கூறினர்.
இந்த நிலையில், திருச்சி சூர்யா 6 மாத காலத்திற்கு, பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக பாஜக OBC அணி மாநில பொது செயலாளர் திரு. சூர்யா சிவா அவர்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், கட்சியின் பொறுப்புகளிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இருவரும் சுமூகமாகச் செல்ல விரும்பினாலும் தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சுமூகமாகச் சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன்.
நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனால் பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டராக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம்' என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“