scorecardresearch

‘தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது’: ஆளுநர் தமிழிசை பேச்சு

“நீங்கள் வேண்டுமென்றாலும் சரி, வேண்டாம் என்றாலும் சரி தமிழ்நாட்டிற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது.” என்று ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்.

Trichy: Tamilisai Soundararajan press meet in tamil
Telanganaand Puducherry Governor Tamilisai Soundararajan during press meet in Trichy

க.சண்முகவடிவேல்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை ஆணையர் சத்திய பிரியா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “புதுச்சேரியில் 13 ஆண்டுகளுக்குப் பின் பட்ஜெட் தாக்கல் நடைபெறுவது பெருமையான நிகழ்ச்சி. புதுச்சேரி பல வகைகளில் முன்னேறி வருகிறது என்பதற்கு இந்த பட்ஜெட் முன்னுதாரணம். இரவல் ஆளுநர் என்று விமர்சிக்கப்படும் நிலையில் தான் முழுநேரம் பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிறோம். கொரோனா காலகட்டத்தில் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம்.

இரவல் ஆளுநராக இருந்தாலும் எல்லாவற்றையும் செய்ய முடியும். இரக்கமுள்ள ஆளுநராகவே நான் பணியாற்றி வருகிறேன்.
திமுகவை சேர்ந்த சகோதர, சகோதரிகள் புதுவையில் என்னை பாராட்டினார்கள். ஏனென்றால், என்னுடைய முழுமையான உரை ஒரு மணி நேரம் இருந்தது.

நீங்கள் எப்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வருவீர்கள் என்று என்னை ட்விட்டரில் கேட்கிறார்கள், நீங்கள் வேண்டுமென்றாலும் சரி வேண்டாம் என்றாலும் சரி தமிழ்நாட்டிற்கு நான் வருவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன்” என்று கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy tamilisai soundararajan press meet in tamil

Best of Express