தமிழ்நாடு முழுவதும் 20 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாக இருந்த மனோகர் மயிலாடுதுறை நில அபகரிப்பு சிறப்பு பிரிவுக்கும், திருச்சி கே.கே.நகர் உதவி கமிஷனராக இருந்த பழனியப்பன் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த கல்யாணகுமார் கரூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த அப்துல் ரகுமான் புதுக்கோட்டை டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருச்சி என்ஐபி சிஐடி டிஎஸ்பியாக இருந்த தினேஷ்குமார் லால்குடி டிஎஸ்பியாகவும், ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தஞ்சை மாவட்டம் வல்லம் டிஎஸ்பியாகவும், நாகப்பட்டினம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மதுரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாக இருந்த திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணையம் டிஎஸ்பியாகவும், திருச்சி பயிற்சி மையம் டிஎஸ்பியாக இருந்த மயில்சாமி மயிலாடுதுறை சிவில் சப்ளை சிஐடி டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நில அபகரிப்புப் பிரிவு டிஎஸ்பி கந்தசாமி விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாகவும், தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி அருணாசலம் கன்னியாகுமரி மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் டிஎஸ்பியாக இருந்த பழனிசாமி சேலம் ரேஞ்ச் பயிற்சி மைய டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர மேலப்பாளையம் உதவி கமிஷனராக இருந்த காமராஜ் பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், புதுக்கோட்டை டிஎஸ்பியாக இருந்த ராகவி சென்னை என்ஐபி சிஐடி டிஎஸ்பியாகவும், திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுந்தரபாண்டியன் மயிலாடுதுறை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக இருந்த கார்த்திகேயன் விழுப்புரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அருள்மொழி அரசு தஞ்சை டிஎஸ்பியாகவும், கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த அண்ணாதுரை நாகப்பட்டினம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பியாக இருந்த எம்.எஸ்.எம். வளவன் சென்னை பெருநகர காவலர் நலன் மற்றும் சமூக காவல் பிரிவு உதவி கமிஷனராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.