அலைமோதும் பயணிகள் கூட்டம்: திருச்சி- சென்னைக்கு சிறப்பு பஸ்கள்
சென்னையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், மீண்டும் சென்னை திரும்ப திருச்சி கும்பகோணம் கோட்டத்தில் இருந்து அதிகப்படியான பேருந்துகளை இயக்கவிருப்பதாக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து, அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் மீண்டும் சென்னை திரும்ப திருச்சி கும்பகோணம் கோட்டத்தில் இருந்து அதிகப்படியான பேருந்துகளை இயக்கவிருப்பதாக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்த விபரம் வருமாறு :
Advertisment
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலமாக இன்றும், நாளையும் 15, 16-ம் தேதிகள் தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக திருச்சியில் இருந்து வழக்கத்தைவிட கூடுதலாக திருச்சி சென்னை வழித்தடத்தில் 150 பேருந்துகளும், தஞ்சாவூர் சென்னை வழித்தடத்தில் 25 பேருந்துகளும், திருச்சி திருப்பூர் வழித்தடத்தில் 40 பேருந்துகளும், திருச்சி- கோயம்புத்தூர் வழித்தடத்தில் 40 பேருந்துகளும், நாகப்பட்டினம்- சென்னை வழித்தடத்தில் 52 பேருந்துகளும், கும்பகோணம் - சென்னை வழித்தடத்தில் 50 பேருந்துகளும், காரைக்குடி - சென்னை வழிதடத்தில் 25 பேருந்துகளும், ராமநாதபுரம்- சென்னை வழிதடத்தில் 25 பேருந்துகளும், புதுக்கோட்டை- சென்னை வழிதடத்தில் 30 பேருந்துகளும், இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.” என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் நிர்வாக இயக்குனர் எஸ் எஸ் ராஜ்மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க. சண்முகவடிவேல் - திருச்சி
Advertisment
Advertisement
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”