Advertisment

திருச்சி டூ தாய்லாந்து விமான சேவை மீண்டும் தொடக்கம்; இனி 3 மணி 30 நிமிடத்தில் பறக்கலாம்!

திருச்சி – பாங்காங் விமான சேவை மீண்டும் தொடக்கம்; கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனங்கள்; அடுத்த ஒரு மாதத்திற்கு டிக்கெட்கள் முழுமையாக நிரம்பின

author-image
WebDesk
New Update
air asia trichy

திருச்சி விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான சேவையை மீண்டும் தாய் ஏர்வேஸ், ஏர் ஏசியா நேற்று இரவு முதல் துவக்கியுள்ளது.

Advertisment

பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு இரவு 10.35 மணிக்கு 46 பயணிகளுடன் வந்த முதல் விமானத்துக்கு தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வாட்டர் சல்யூட் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 11.05-க்கு பாங்காக்குக்கு புறப்பட்ட விமானத்தில் 176 பேர் பயணித்தனர். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் திருச்சி - பாங்காக் இடையே விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

186 இருக்கைகள் கொண்ட விமானத்தில் அறிமுக சலுகை கட்டணமாக திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு ரூபாய் 7,900 என அறிவிக்கப்பட்டது. அதையும் தாண்டி அடுத்த ஒரு மாதம் முழுவதும் இந்த விமானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டது. இந்த விமானம் மூலம் மூணு மணி 30 நிமிடங்கள் பயண நேரத்தில் பங்காக்கிற்க்கு செல்ல முடியும்.

திருச்சி - பாங்காக் - திருச்சி விமான சேவை அடுத்த மாதம் முழுவதும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி பயணிகளிடம் இந்த விமான சேவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லவும் இந்த விமான சேவை பயனுள்ளதாக இருக்கும் என விமான பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trichy Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment