Advertisment

த.வெ.க நிர்வாகி கண்ணீர் அஞ்சலி பதாகை விவகாரம்; எஸ்.பி அலுவலகம் புகுந்து இளைஞரை குண்டுகட்டாக தூக்கி சென்ற இன்ஸ்பெக்டர்

மகேந்திரனை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸாா், அவர் மீது, அரசு அலுவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிந்து கைது செய்தனா்.

author-image
WebDesk
New Update
tri


திருச்சி பெரியசெட்டித் தெருவைச் சோ்ந்தவா் வி.எல். சீனிவாசன். வழக்குரைஞரான இவா் விஜய்யின் தவெக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராகவும் இருந்தாா். கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற கட்சியின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்கச் சென்றபோது, காா் விபத்துக்குள்ளாகியதில் சீனிவாசன் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். மறைந்த சீனிவாசன் திருவெறும்பூர் நவல்பட்டு சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார். 

Advertisment

இந்த நிலையில் வழக்கறிஞரும், தமிழக வெற்றி கழகம் திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவருமான சீனிவாசன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகை வைக்கப்பட்டது.

மேலும், இந்த பலகையினால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது எனக் கூறி நவல்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் நிக்சன் உத்தரவின் பேரில் விளம்பரப் பலகையினை அகற்ற நவல்பட்டு காவல் நிலைய காவலர்கள் தொலைபேசி வாயிலாக பதாகை வைத்த நபர்களுக்கு அறிவுறுத்தினர். இதனை அறிந்த அப்பகுதியைச் சார்ந்த அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் மகேந்திரன், அந்த காவலர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கண்ணீர் அஞ்சலி பதாகையுடன் சேர்த்து, சாலை மேல் வைக்கப்பட்டுள்ள சாலை போக்குவரத்து மற்றும் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ள மற்ற விளம்பர பதாகைகளையும் எடுத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு தனது வாகனத்தில் வந்த நவல்பட்டு காவல் ஆய்வாளர் நிக்சன் அங்கு இருந்த இளைஞர்களிடம் கண்ணீர் அஞ்சலி பதாகையை மட்டும் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தத்தில் இருந்த பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கண்ணீர் அஞ்சலி பதாகையை மட்டும் அகற்றியுள்ளனர். அதேநேரம் அந்தப் பகுதியில் இருந்த பல்வேறு விளம்பர பதாகைகளை அகற்றாமல் அதற்கான நடவடிக்கையும் எடுக்காமல் காவல் ஆய்வாளர் நிக்சன் அந்தப் பகுதியில் இருந்து சென்று விட்டார்.

இதையடுத்து மகேந்திரன் தரப்பினா் மற்றும் தவெகவினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று ஆய்வாளா் மீது புகாா் அளித்தனா். அப்போது அங்கு வந்த காவல் ஆய்வாளா் நிக்சன் மற்றும் போலீஸாா் எஸ் பி அலுவலகத்திற்குள் உள்ளேயே புகுந்து வலுக்கட்டாயமாக மகேந்திரனை குண்டு கட்டாக தூக்கி ஜீப்பில் ஏற்றி, நவல்பட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனா். இதைக் கண்டித்து தவெகவினா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் எஸ்பி அலுவலக வளாகம் அருகே முழக்கமிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.

மகேந்திரனை காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸாா், அவர் மீது, அரசு அலுவலரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனா். பின்னா் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனா்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த நபரை நவல்பட்டு காவல் ஆய்வாளர் தனது ஜீப்பில் குண்டு கட்டாக தூக்கிச் சென்ற காணொளி சமூக வலைதளத்தில் வைரலானது.

செய்தி: க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment