TVK Vijay Campaign Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தில்லு முல்லு தான் நடக்கும்: விஜய் பேச்சு

டிவிகே விஜய் பிரச்சார நேரடி அறிவிப்புகள் இன்று- திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிவிகே விஜய் பிரச்சார நேரடி அறிவிப்புகள் இன்று- திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய்யின் பிரசார பயணத்துக்கு 25 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TVK Chief Vijay Campaign Live Updates Today

TVK Assembly poll campaign in Trichy Live Updates

TVK Assembly poll campaign Live Updates: த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கி உள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இதில், பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Advertisment

விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் சென்ற விஜய்-க்கு தொண்டர்கள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.

2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.

  • Sep 13, 2025 21:01 IST

    ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் தில்லு முல்லு தான் நடக்கும்: விஜய் பேச்சு

    அரியலூரில் பேசிய விஜய் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒத்துவராது. இதனால் தில்லு முல்லு தான் நடக்கும் என்று பேசியுள்ளார். மேலும் பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில், தி.மு.க. பா.ஜ.க. இரண்டும் ஒரே வகையறா தான் என்று கூறியுள்ளார்.



  • Sep 13, 2025 20:54 IST

    'மை டியர் சி.எம்.சார்' அரியலூரில் பேசிய விஜய்

    மதுரை மாநாட்டில் அங்கிள் என்று அழைத்தததால் மரியாதை குறைவாக இருப்பதாக பலரும் விமர்சித்திருந்த நிலையில், அரியலூரில் பேசிய விஜய், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லி ரீல் சுத்துறீங்களே மை டியர் என்று சொல்லிவிட்டு, நான் தான் அன்பா பாசமா பேசுனா எங்களுக்கு புடிக்காதே மை டியர் சி.எம்.சார் என்று பேசியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Sep 13, 2025 20:50 IST

    மீண்டும் பா.ஜ.க.வை தாக்கிய விஜய்

    இந்தியாவில் ஓட்டு திருட்டு நடைபெற்றுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். 2029-ல் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். அதற்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் வைத்து மொத்த தில்லு முள்ளு வேலைகளை செய்ய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. அவர்கள் அப்படி என்றால் தி.மு.க அரசும் இங்கே அப்படித்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். 



  • Sep 13, 2025 20:48 IST

    அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? விஜய்

    அரியலூரில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், அரசியலுக்கு வந்து தான் நான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதற்கு அவசியமே இல்லை என்று கூறியுள்ளார்.



  • Sep 13, 2025 20:47 IST

    ஜனநாயக போருக்கு தயராகுங்கள்: த.வெ.க தலைவர் விஜய்

    திருச்சியை தொடந்து அரியலூரில் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய், வருவதற்கு தாமதம் ஆகிவிட்டதால், மன்னிப்பு கேட்டுக்கொண்டு, பேச தொடங்கினார். திருச்சியில் காலையில் மைக் கொஞ்சம் ரிப்பேர் ஆகிவிட்டது என்று சொல்லி பேசிய அவர், அடுத்த வரும் நடைபெறும் ஜனநாயக போருக்கு தயராகுங்கள் என்று கூறியுள்ளார்.



  • Sep 13, 2025 19:56 IST

    நீட் மற்றும் கல்வி கடனை தி.மு.க ரத்து செய்யவில்லை: அரியலூரில் விஜய் பேச்சு

    திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய், தற்போது அரியலூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், நீட் மற்றும் கல்வி கடனை தி.மு.க ரத்து செய்யவில்லை என்றும், வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னார்களே கொடுத்தார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Sep 13, 2025 19:01 IST

    திருச்சியில் பிரச்சாரம் முடிவு: அரியலூர் வந்தடைந்த த.வெ.க தலைவர் விஜய்

    திருச்சியில், பிரச்சாரத்தை முடித்த த.வெ.க தலைவர் விஜய், அரியலூர் சென்றுள்ள கீழப்பழுவூர் வந்தடைந்த நிலையில், அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேளதாளங்கள் முழங்க விஜய் வரும் வாகனத்திற்கு மலர் தூவி வரவேற்பு அளித்துள்ள நிலையில், விஜய்-யை காண தவெக தொண்டர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.



  • Sep 13, 2025 18:54 IST

    திருச்சி 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது திருச்சி: விஜய் பேச்சு

    கொள்கை உள்ள மண் திருச்சி, திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனை ஏற்படும். எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் வாழ்ந்த மண் திருச்சி 1974-ல் எம்ஜிஆர் முதல் மாநாடு நடத்தியது. திருச்சியில் தான் என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.



  • Sep 13, 2025 17:49 IST

    தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்: விஜய் பேச்சு

    திமுகவை மக்கள் இனி நம்ப மாட்டார்கள். கிட்னி திருட்டை முறைகேடு என்கிறார்கள். தி.மு.க.வினருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்துள்ளது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் என்னவானது? தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். திமுகவை மக்கள் இனி நம்ப மாட்டார்கள்.வரும் தேர்தலில் தவெகவுக்கு வெற்றி நிச்சயம்  என த.வெ.க தலைவர் விஜய் பேசியுள்ளார்.



  • Sep 13, 2025 17:09 IST

    விஜயின் வருகைக்காக காத்திருக்கும் அரியலூர் மக்கள் 

    தளபதி தான் எங்க உயிர்.. அவர அவ்ளோ புடிக்கும். விஜய் பேசறத கேட்க ஆர்வத்தோட காத்திருக்கோம் என்று அரியலூர் மக்கள் பேட்டி அளித்தனர்.  



  • Sep 13, 2025 16:33 IST

    விஜயை காண கூடிய அரியலூர் மக்கள்

    எங்க தலைவரை பார்க்க தான் காலையில இருந்து வெயிட் பண்றோம். 2026-ல் தளபதி தான் ஜெயிப்பாரு என  அரியலூர் மக்கள் உற்சாகமாக பேட்டி அளித்தனர்.



  • Sep 13, 2025 16:08 IST

    திருச்சியில் இருந்து புறப்பட்ட விஜய்

    திருச்சியில் பிரசாரத்தை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் புறப்பட்டார். காந்தி மார்க்கெட் - தஞ்சை சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாததால் விரைந்து வாகனம் செல்கிறது.  முன்னதாக இன்று காலை தொண்டர்கள் கூட்டத்தால் விமான நிலையத்திலிருந்து சுமார் 5 மணி நேரம் பயணித்து மரக்கடை பகுதிக்கு  விஜய் சென்றடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Sep 13, 2025 15:57 IST

    திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?  - விஜய்

    மாதா மாதம் மின்சார கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று சொன்னீர்களே, செய்தீர்களா?  கல்வி கடன் ரத்து என்றீர்களே, செய்தீர்களாம், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றீர்களே, நிரப்புனீர்களா?, பழைய ஓய்வுதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த்ய்வோம் என்றீர்களே, செய்தீர்களா? என அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் எழுப்பினார். தொழில்நுட்ப கோளாறால் மைக் வேலை செய்யாததாலும் தனது பேச்சை 15 நிமிடத்தில் சுருக்கி கொண்டு அரியலூருக்கு பயணம் ஆனார். 



  • Sep 13, 2025 15:56 IST

    திருச்சியில் முதல் பரப்புரையை முடித்துக் கொண்டு அரியலூர் புறப்பட்டார் நடிகர் விஜய்

    தமிழக தேர்தல் வரலாற்றில் திருச்சி எப்பொழுதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் திருச்சியை மையம் கொண்டு தனது முதல் பிரச்சாரத்தை விஜய் இன்று துவக்கினார். ஒருசில மண்ணைத் தொட்டால் நல்லது, நல்ல காரியங்களை அங்கிருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். திருச்சி தொடங்கினால் திருப்பம் ஏற்படும் என்று சொல்வார்கள். அண்ணா 1956ல் தேர்தலில் நிற்கணும் என்று எண்ணியதே திருச்சியில்தான். எம்.ஜி.ஆர் 1974ல் முதல் மாநாடு நடத்தியதும் திருச்சியில்தான் என்று விஜய் பேசினார். 

     

     



  • Sep 13, 2025 15:47 IST

    விஜய் பேசும்போது மைக்கில் கோளாறு

    திருச்சி பரப்புரையில் மைக் பிரச்சனையால் தவெக தலைவர் விஜய் பேசுவது தொண்டர்களுக்கு கேட்காமல் இருந்தது. அனைத்து தொலைக்காட்சி நேரலையிலும் சிக்கல் இருந்தது. 



  • Sep 13, 2025 15:43 IST

    ஜனநாயக போருக்காக வந்திருக்கிறேன்

    அடுத்தாண்டு நடைபெற உள்ள ஜனநாயக போருக்கு முன்பாக மக்களை பார்க்க வந்துள்ளேன் திருச்சியில் தொடங்கியது எல்லாம் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். 



  • Sep 13, 2025 15:42 IST

    கொள்கைக்கான மண் திருச்சி - விஜய்

    மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற திருச்சி கொள்கைக்கான மண்; உங்களை பார்த்தவுடன் ஒரு எமோஷனல் கனெக்ட், மனதில் ஒரு பரவசம் மலைக்கோட்டை பிள்ளையார், தந்தை பெரியாருடைய இடம் என திருச்சிக்கு பல பெருமை உள்ளது என்று தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் திருச்சியின் பெருமைகளை பேசினார்.



  • Sep 13, 2025 15:40 IST

    பெரியாரும் அண்ணாவும் எம்ஜிஆரும் நேசித்த இடம் திருச்சி - தவெக தலைவர் விஜய்

    எம்.ஜி.ஆர் முதல் மாநில மாநாடு நடத்திய இடம் திருச்சி என விஜய் கூறியுள்ளார். மேலும் அறிஞர் அண்ணா அரசியலில் களமாட விரும்பிய இடம் திருச்சி என்றார். பெரியாரும், அண்ணாவும், எம்.ஜி.ரும் நேசித்த இடம் திருச்சி என்று விஜய் கூறியுள்ளார்.



  • Sep 13, 2025 14:30 IST

    அத்துமீறும் த.வெ.க தொண்டர்கள்... மரக்கடை பகுதியில் மின்தடை!

    த.வெ.க தொண்டர்கள் அனுமதியின்றி ஆபத்தான முறையில் வீடுகளின் மேற்கூரைகளில் ஏறியுள்ள நிலையில், மரக்கடை பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது.



  • Sep 13, 2025 14:28 IST

    மரக்கடை வந்தடைந்தார் த.வெ.க தலைவர் விஜய்!

    திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் மரக்கடை பகுதிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வந்தடைந்துள்ளார்.  திருச்சி விமானநிலையத்திலிருந்து சுமார் 4 மணிநேர பயணத்திற்குப் பின்  விஜய் வந்தடைந்துள்ளார்.



  • Sep 13, 2025 14:24 IST

    பிரச்சாரம் செய்ய உள்ள மரக்கடை பகுதியை நெருங்கும் விஜய்... கட்டுக்கடங்காமல் குவியும் கூட்டம்!

    விமான நிலையத்திலிருந்து மரக்கடை பிரச்சார இடம் வரை ரசிகர்கள் திரண்டிருப்பதால் விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிரச்சாரம் செய்யவுள்ள மரக்கடை பகுதியை விஜய் நெருங்கும் நிலையில் கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்து வருகிறது.



  • Sep 13, 2025 13:56 IST

    திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கிய த.வெ.க. தலைவர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, கணிசமான வாக்குகளை பெரும் விஜயால் தி.மு.க-வின் வெற்றிக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது. தி.மு.க கூட்டணி கட்சிகள் அணி மாறுவதற்கு எந்த தேவையும் இல்லை” என்றார்.



  • Sep 13, 2025 13:25 IST

    த.வெ.க தேர்தல் பிரச்சாரம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மயக்கம்1


    தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்சி வந்த த.வெ.க தலைவர் விஜயை காண ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மயக்கமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.



  • Sep 13, 2025 13:17 IST

    நாகையில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!

    நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த,வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய அக்கட்சியினர் அனுமதி கேட்ட நிலையில் அதே நாளில் தி.மு.க.வினர் கூட்டம் நடத்த ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாற்று இடங்களாக பரிந்துரைக்கப்பட்ட நாகை அபிராமி சன்னதி வாசல், புத்தூர் ரவுண்டானா, காடாம்பாடி ஐடிஐ வளாகத்திலும் இடவசதி போதாது என்பதால் விஜய் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.



  • Sep 13, 2025 13:04 IST

    2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்

    திருச்சி டோல்கேட் பகுதியில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.  விஜய் தனது பரப்புரை வாகனத்தில் அப்பகுதியைக் கடந்து சென்றபோது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



  • Sep 13, 2025 13:00 IST

    தண்ணீருக்கு தவிக்கும் தவெக தொண்டர்கள்

    திருச்சியில் விஜய்யின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்த தொண்டர்கள், கடும் வெயிலின் காரணமாகத் தண்ணீரின்றித் தவித்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், ஒரு பாட்டில் தண்ணீருக்காகப் பலரும் முண்டியடிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால், தொண்டர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர்.



  • Sep 13, 2025 12:35 IST

    த.வெ.க. தொண்டர்கள் அத்துமீறல்

    திருச்சியில் த.வெ.க. தொண்டர்கள் கொடிக் கம்பங்களின் மீதும், வாகனங்களின் மேலேயும் ஏறி பயணித்து அத்துமீறலில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் வருகையை ஒட்டி ஏற்பட்ட இந்தக் கூட்டத்தில், தொண்டர்கள் கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. 

    Video Credit: Sun News



  • Sep 13, 2025 12:33 IST

    விஜய்யை காண வந்த கர்ப்பிணி பெண் மயக்கம்

    திருச்சியில் விஜய்யைக் காண வந்த கூட்டத்தில், தபால் நிலையம் அருகே காத்திருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் வெயில் காரணமாக திடீரென மயக்கமடைந்தார். 



  • Sep 13, 2025 12:18 IST

    கூட்ட நெரிசலால் 6 பேர் மயக்கம்

    தேர்தல் பரப்புரைக்காகத் திருச்சிக்கு வந்த விஜய்யைக் காண, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி, ஆறு பேர் மயக்கமடைந்தனர். மயக்கமடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Sep 13, 2025 12:07 IST

    டோல்கேட் அருகே வந்தடைந்த விஜய்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து டோல்கேட் பகுதிக்கு வருவதற்கு விஜய் தனது பிரச்சார வாகனத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பயணித்துள்ளார். ரசிகர்களும் தொண்டர்களும் வழிநெடுகிலும் திரண்டு இருந்ததால், அவரது வாகனம் மிகவும் மெதுவாகவே பயணிக்க முடிந்தது



  • Sep 13, 2025 12:05 IST

    திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    ஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை இன்று திருச்சியில் தொடங்கியுள்ளார். இதன் காரணமாக, அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் நகர் முழுவதும் குவிந்துள்ளதால், போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

    அவசர வேலைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்களுக்கு இதனால் கடும் இடையூறு ஏற்பட்டது. மேலும், திட்டமிட்டபடி விஜய்யின் பிரச்சாரமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.



  • Sep 13, 2025 11:37 IST

    திருச்சி மரக்கடைப் பகுதியில் ட்ரோன் காட்சிகள்

    திருச்சி மரக்கடைப் பகுதியில் தவெக தொண்டர்கள் திரண்டுள்ளதன் ட்ரோன் காட்சிகள், அப்பகுதியில் நிலவும் கடுமையான கூட்ட நெரிசலைக் காட்டுகின்றன. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஒன்று கூடியுள்ளதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது போல் காட்சியளிக்கிறது.

    Video credit: Puthiya Thalaimurai



  • Sep 13, 2025 11:29 IST

    சிவப்பாக மாறிய கூகுள் மேப்

    விஜய் திருச்சிக்கு வருகை புரிந்ததையடுத்து, விமான நிலையத்தில் இருந்து மரக்கடை செல்லும் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக, கூகுள் மேப்பில் அந்த வழித்தடம் முழுவதும் சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது.



  • Sep 13, 2025 11:15 IST

    விமான நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரம் மட்டுமே நகர்ந்துள்ள விஜய்யின் வாகனம்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் மட்டுமே நடிகர் விஜய்யின் வாகனம் நகர்ந்துள்ளதால், அவர் தனது பரப்புரையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    விஜய்யின் வருகையை எதிர்பார்த்து, தொண்டர்களும் ரசிகர்களும் சாலையின் இருபுறமும் குவிந்துள்ளதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலைக் கடந்து, விஜய் தனது வாகனத்தில் திருச்சி மரக்கடைப் பகுதியை நோக்கி மிகவும் மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறார். இதனால், அவரது திட்டமிடப்பட்ட பரப்புரை நிகழ்வு தாமதமாகத் தொடங்கியுள்ளது.



  • Sep 13, 2025 11:10 IST

    வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு

    திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே காலை 10:30 மணி முதல் 11:00 மணி வரை பேச விஜய்க்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியிருந்தனர்.

    ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் விஜய் மரக்கடை பகுதிக்குச் செல்ல முடியாத காரணத்தால், அனுமதித்த நேரத்திற்குள் அவர் பேச முடியவில்லை. குறிப்பிட்ட நேரத்தை மீறிப் பேசினால் காவல்துறை வழக்கு பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 13, 2025 11:08 IST

    தில்லை நகர் வழியாக திருப்பி விடப்பட்ட வாகனங்கள்

    திருச்சியில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பரப்புரையை தொடங்கவுள்ளதால், மரக்கடைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தில்லை நகர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. 



  • Sep 13, 2025 11:07 IST

    திருச்சி: தொண்டர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சியில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். இந்த நிகழ்விற்காக, திருச்சி விமான நிலையம் மற்றும் டோல்கேட் சாலையில் அதிக அளவிலான தொண்டர்கள் திரண்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    விஜய்யின் வருகையை முன்னிட்டு திரண்ட அவரது கட்சியின் தொண்டர்களால் சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.



  • Sep 13, 2025 11:06 IST

    5 மணி நேரத்திற்கும் மேலாக த.வெ.க. தொண்டர்கள்

    விஜய் வருகைக்காக திருச்சி மரக்கடை பகுதியில்  5 மணி நேரத்திற்கும் மேலாக தவெக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.



  • Sep 13, 2025 10:57 IST

    திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து நெரிசல்

    தொண்டர்களின் பெரும் கூட்டத்தாலும், இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பாலும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து சீர்செய்யும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மரக்கடை செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.



  • Sep 13, 2025 10:51 IST

    மலர்தூவி விஜயை வரவேற்கும் த.வெ.க. தொண்டர்கள்

    திருச்சியில் பிரசார செய்ய உள்ள தவெக தலைவர் விஜயை வரவேற்க சாலை நெடுகிலும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். மேலும் பிரசார வானத்தில் வரும் விஜயை மலர்தூவி தவெக தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த சூழலில் திருச்சி மரக்கடை பகுதி ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களால் நிரம்பி வழிந்து வருகிறது.



  • Sep 13, 2025 10:44 IST

    விஜய்யை பார்க்க வீட்டின் மீது ஏறும் இளைஞர்கள்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை விஜய் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். விமான நிலையத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஆர்வமிகுதியில் ஆபத்தான முறையில் மரங்கள், மின் கம்பங்கள், வீட்டின் மீது ஏறி இளைஞர்கள் சிலர் அமர்ந்துள்ளனர்.



  • Sep 13, 2025 10:42 IST

    திருச்சி மரக்கடையை சூழ்ந்த த.வெ.க. தொண்டர்கள்

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் த.வெ.க. தலைவர் விஜய் சென்று கொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழிநெடுகிலும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சூழ்ந்துள்ளனர்.அங்கிருந்து பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் மரக்கடை பகுதியில் குவிந்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது



  • Sep 13, 2025 10:16 IST

    தடுப்புகளை உடைத்து கொண்டு ஓடிய ரசிகர்கள் -பரபரப்பு

    த.வெ.க. தலைவர் விஜயின் பரப்புரை வாகனம் திருச்சி விமான நிலையத்தைவிட்டு நகர முடியாத அளவுக்கு சூழ்ந்த தொண்டர்கள். திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் தடுப்புகளை உடைத்து கொண்டு ஓடிய ரசிகர்கள், தொண்டர்கள், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். இதனால், அங்கு சற்றுநேரம் பரபரப்பு நிலவியது.



  • Sep 13, 2025 09:57 IST

    சென்னையிலிருந்து திருச்சி வந்தார் த.வெ.க. தலைவர் விஜய்

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய். விஜயை வரவேற்க திருச்சி விமான நிலையத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விஜய்க்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.



  • Sep 13, 2025 09:53 IST

    விஜய் பிரச்சாரம் - திருச்சியில் குவியும் த.வெ.க தொண்டர்கள்

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது பிரசார பயணத்தை திருச்சியில் இன்று தொடங்குகிறார். இந்நிலையில் விஜய்யை வரவேற்க திருச்சி விமான நிலையம் மற்றும் மரக்கடை பகுதியில் ஆயிரக்கணக்கான த.வெ.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.



  • Sep 13, 2025 09:24 IST

    திருச்சி பரப்புரை சிறப்பாக அமையும்: த.வெ.க ராஜ்மோகன்

    தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களே காவல்படைதான். எனவே காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை பின்பற்றி சிறப்பாக பரப்புரை நடைபெறும். திருச்சி திருப்புமுனை மாவட்டம். அரசியல் கட்சிகளின் முக்கியத்துவம் நிறைந்த மாவட்டம் திருச்சி என்பதால் பரப்புரை சிறப்பாக அமையும் என்று புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் கூறினார்.



  • Sep 13, 2025 09:19 IST

    சென்னையிலிருந்து திருச்சி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

    த.வெ.க தலைவர் விஜய் தனது பிரசார சுற்றுப் பயணத்தை இன்று திருச்சியிலிருந்து தொடங்குகிறார். இதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து காரில் விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி நோக்கி புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்.

     



  • Sep 13, 2025 09:18 IST

    விஜய்யின் பிரசார பயணம் திருச்சியில் இன்று தொடக்கம்

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் தேர்தல் பிரசார பயணத்தை திருச்சியில் இருந்து விஜய் தொடங்குகிறார். அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே, மக்கள் சந்திப்பையொட்டி இலச்சினை (லோகோ) ஒன்றை த.வெ.க. வெளியிட்டு உள்ளது. இந்த லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.

     



Vijay TVK Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: