திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. சில இடங்களில் வாக்கு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.
அந்த வகையில், திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி பாகம் எண் 214 - ல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்