Advertisment

திருச்சி கோயில் திருப்பணிக்காக ஆய்வறிக்கை வழங்க ரூ.10 லட்சம் லஞ்சம்: தொல்லியல் பெண் நிபுணர் கைது

திருச்சி: குணசீலம் கோயில் திருப்பணிக்காக லஞ்சம் பெற்ற தொல்லியல்துறை நிபுணர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy: Woman archaeologist arrested for taking Rs 10 lakh bribe for temple restoration

trichy gunaseelam temple restoration; Woman archaeologist arrested for taking Rs 10 lakh bribe Tamil News

க.சண்முகவடிவேல்

Advertisment

Trichy District News in tamil: திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவ திருத்தலங்கள் ஒன்றான குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தம் காலை, மாலை இருவேளையிலும் மருந்தாக தரப்படும். சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளித்து வைத்தியம் வழங்கப்பட்டு வருகிறது.இப்படி பிரசித்தி பெற்ற திருக்கோயிலில் திருப்பணிகளை நிறைவேற்ற பெண் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்ட வழக்கில் அதிரடியாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசேலத்தைச் சேர்ந்த அரங்கநாதன் மகன் பிச்சுமணி ஐயங்கார். இவர் பிரசித்தி பெற்ற குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோவிலில் பரம்பரை நிர்வாகியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு திருப்பணி வேலைகள் நடந்து 12 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது உபயதாரர்கள் மூலமாக திருப்பணி நடத்த உத்தேசித்துள்ளார்கள். அதனால் அது சம்பந்தமாக முறையான அனுமதியை இந்து அறநிலையத்துறையில் பெற்றுள்ளார்கள்.

அதற்கு மேலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை ஒன்றை பெறவேண்டிய நிலையில் இருந்துள்ளது. அது சம்பந்தமாக மேற்படி கமிட்டியினர், கடந்த 02.06.2022 அன்று குணசீலம் கோவிலில் ஆய்வு செய்துள்ளனர். அதற்குப் பிறகும் ஆய்வு அறிக்கை கோவில் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெறாதால் நிர்வாகத்தினர் மேற்படி கமிட்டியினரை தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த நிபுணர் குழுவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி ராஜாநகர் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த தொல்லியல்துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி உள்ளார். இவர் ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி ஆவார். கமிட்டியின் உறுப்பினரும், தொல்லியல்துறை வல்லுனரான மூர்த்தீஸ்வரி கடந்த 12.10.2022 அன்று மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மேற்படி டிரஸ்டியை சந்தித்து 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் கமிட்டியிலிருந்து ஆய்வறிக்கை வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பிச்சுமணி ஐயங்கார் பத்து லட்ச ரூபாய் அதிகமாக உள்ளதாகவும் இதனை உபயதாரர்களிடம் கேட்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு மூர்த்தீஸ்வரி, ஐந்து லட்ச ரூபாய் குறைத்துக் கொண்டு 5 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் ஆய்வறிக்கை வழங்க முடியும் என்றும் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் கொடுக்குமாறும் பிச்சுமணி ஐயங்காரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் அலுவலகத்திற்கு சென்று அவரிடம் முறையிட்டார். பிச்சுமணி ஐயங்கார் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் கொடுத்த ஆலோசனையின் பேரில் பிச்சுமணி ஐயங்கார், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த தொல்லியல்துறை வல்லுனர் மூர்த்தீஸ்வரியிடம் அவர் லஞ்சமாக கேட்ட முன் பணத்தை நேற்று இரவு கொடுக்கும்போது, அங்கு மறைந்திருந்த டி எஸ் பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்மேரி உள்ளிட்ட போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனை அடுத்து மூர்த்திஸ்ரியை திருச்சி காஜாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிந்தனர்.

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் விசாரணையில் தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களுக்கு இந்த கமிட்டியினரால் ஆய்வறிக்கை வழங்கப்படாமல் கோவில்களின் திருப்பணி வேலைகள் நடைபெறாமல் நிலுவையில் உள்ளது என்பதும், கமிட்டியின் ஆய்வறிக்கை வேண்டுமென்றால் பல இடங்களிலும் லஞ்சம் பெறப்படுவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மூர்த்தீஸ்வரி காரை சோதனை செய்ததில் அவரது காரில் கணக்கில் வராத ஐந்து லட்ச ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Tamilnadu Tamilnadu News Update Tamilnadu News Latest Trichy Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment