scorecardresearch

டி.ஆர்.பி ராஜா அமைச்சராக நாளை பதவி ஏற்பு: ஆவடி நாசர் நீக்கம்

மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சா.மு. நாசர்…

TRP Raja will take office in the Tamil Nadu cabinet on May 11
மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, சா.மு. நாசர்

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு மன்னார்குடியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர். பாலுவின் மகனாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தகவல்கள் தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ராஜ் பவனில் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப் போகிறது என கடந்த சில நாள்களாக பேச்சு அடிபட்டு வந்தது. அப்போது பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மட்டுமின்றி வேறு சிலரும் நீக்கப்படலாம் என யூகங்கள் வெளியாகின.

இந்த யூகங்கள் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு மூத்த அமைச்சர் துரை முருகன் தனக்கு தெரியாது, முதல்வர் இது தொடர்பாக முடிவெடுப்பார் என்றார்.
இந்த நிலையில், இன்று (மே 9) இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சா.மு. நாசர், கடந்த சில மாதங்களுக்குமுன்பு தொண்டர்களை நோக்கி கற்களை வீசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சா.மு. நாசர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trp raja will take office in the tamil nadu cabinet on may 11