Advertisment

அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு உருவாக்கும் அறக்கட்டளை

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வி ஆலோசகராக செயல்பட்டு வரும் இவர் ஷாலோம் மருத்துவ கல்வியகம் எனும் மையத்தை கோவை உட்பட சென்னை,சேலம்,ஈரோடு என பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
coimbatore news, latest covai news, tamil news, latest tamil news

அனிதா காமராஜ்

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உயர் கல்வி ஆலோசகராக செயல்பட்டு வரும் இவர் ஷாலோம் மருத்துவ கல்வியகம் எனும் மையத்தை கோவை உட்பட சென்னை,சேலம்,ஈரோடு என பல்வேறு இடங்களில் நடத்தி வருகிறார்.

Advertisment

12-ம் வகுப்பு முடித்து மருத்துவ கல்வி பயிலும் ஆர்வத்தோடு உள்ள மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைப்பதில்லை எனவும் இது போன்ற மாணவ மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கும் வகையில் வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் சேவையில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஷாலோம் டிரஸ்ட் மற்றும் மருத்துவ கல்வி மையத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலக துவக்க விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதிய மையத்தின் செயல்பாடு குறித்து அனிதா காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் பயில மாணவ மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

மேலும் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றாலும் இந்திய மருத்துவ துறையில் அதற்கான மதிப்பு இருப்பதாகவும் தற்போது அதிக மாணவிகளும் வெளிநாடுகளில் மருத்துவம் பயில ஆர்வம் காட்டுவதாகவும்

இதற்கு காரணம் நல்ல பாதுகாப்பான சூழ்நிலையில் மருத்துவ கல்வி பயில்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் எங்களது மையம் செய்து தருவதாக உறுதி அளித்தார்.

மேலும், நீட் தேர்வில் வெற்றி பெற்று இடம் கிடைக்காத அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டில் மருத்துவம் பயில இலவச திட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளதாக இவ்வாறு தெரிவித்தார் ஷாலோம் அறக்கட்டளை புதிய மையத்தின் அனிதா காமராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment