சுனாமி ஆழிப்பேரலை ருத்ரதாண்டவம் ஆடிய 13-வது நினைவு தினம் இன்று. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் அன்பானவர்களை சுனாமிக்கு பலி கொடுத்தனர். இன்றும், அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மக்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் நாகை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, கடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ஆழிப்பேரலை தோன்றியபோது, அங்கிருந்தவர்கள், ‘ஓடு, ஓடு, அது இந்த பக்கம்தான் வருது”, என மரண பயத்தை வெளிப்படுத்திய வேதனை காட்சிப்பதிவுதான் இது.
