திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் 4 புதிய வெங்கடேஸ்வரா கோயில்களை கட்ட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை சென்னையில் புதிதாக நியமிக்கப்பட்ட உள்ளூர் ஆலோசனைக் குழுவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. உள்ளூர் ஆலோசனை குழு துணை தலைவர்களாக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்.பி மற்றும் உறுப்பினர்களும் பதவியேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி, சென்னை, உளுந்தூர்பேட்டை, மதுரை மற்றும் பாண்டிச்சேரியில் புதிய வெங்கடேஸ்வரா கோயில்கள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், " தி.நகரில் உள்ள பத்மாவதி அம்மன் கோயிலின் கட்டுமானப் பணி விரைவில் முடிவடையும். இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகிவிடும்" என்றார்.
இதுதவிர, ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலை கட்டிவருகிறது.
சென்னை எல்ஏசி தலைவரும், டிடிடி அறக்கட்டளையின் சிறப்பு அழைப்பாளருமான ஜே.சேகர் ரெட்டி கூறுகையில், "இந்தாண்டு இறுதிக்குள் சென்னையில் வெங்கடேஸ்வரா கோயில் கட்டுவதற்கான இடத்தை இறுதி செய்ய தமிழக அரசுடன் கோயில் அமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil