Advertisment

‘சிறுவர்கள் பைக் கேட்டால் ஏன் வாங்கி தர்றீங்க?’ சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எஃப். வாசன் கேள்வி!

“சிறுவர்களிடம் ஏன் பைக் தருகிறீர்கள்? நிறைய பேர் சிறுவர்கள் சூப்பர் பைக் கேட்கிறார்கள் என்று சொல்வார்கள். நானும்தான்  எனக்கு சூப்பர் பைக் வேண்டும் என சின்ன வயதில் சண்டை போட்டேன். நம்ம தானே குழந்தைகளை சொல்லி திருத்த வேண்டும்” என்று டி.டி.எஃப். வாசன் கூறினார்.

author-image
WebDesk
New Update
TTF Vasan I

‘சிறுவர்கள் பைக் கேட்டால் ஏன் வாங்கி தர்றீங்க?’ சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எஃப். வாசன் கேள்வி!

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் என்.எச். 48 நெடுஞ்சாலையில் வேகமாக பைக் ஓட்டி சாகசம் செய்தபோது செப்டம்பர் 17-ம் தேதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இதையடுத்து, அவர் மீது வழகுப்பதிந்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

முதலில் டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதுடன், அவருடைய ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றம் முதலில் ஜாமீன் அளிக்க மறுத்தாலும், பின்னர் ஜாமீன் அளிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, டி.டி.எஃப். வாசன் இன்று (நவம்பர் 3) புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் ஊடகங்கள் சிறை அனுபவம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசினார்.

சிறை அனுபவம் எப்படி இருந்தது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன், “சிறை அனுபவம் கண்டிப்பாக கஷ்டம்தான். ஆனால், எனக்கு உள்ள எல்லாம் சிறைவாசிகள் தெரிஞ்சவங்க இருந்தாங்க, கை உடைஞ்சிருக்கு, குளிக்கிறது ரொம்ப கஷ்டம், முதுகெலும்பு உடைஞ்சிருக்கு படுக்கிறது ரொம்ப கஷ்டம், பசங்க எல்லாம் தலையை குளிப்பாட்டி விடுவாங்க. ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தாங்க” என்று கூறினார்.

சிறையில் அதிகாரிகள் எப்படி நடத்தினார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன், “எல்லாமே பண்பாதான் நடந்துக்கிறாங்க” என்று கூறினார்.

இதற்குப் பிறகு, 10 ஆண்டுகள் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருக்கிறார்கள், இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது, இதை எப்படி எதிர்க்கொள்கிறீர்கள்?  என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன், “அதுதான் என் லைஃப், என்னுடைய ஃபேஷனைத்தான் என்னுடைய தொழிலாக மாற்றி இருக்கிறேன். என் வாழ்க்கை முழுவது என்னுடைய ஃபேஷனுக்காகவே அர்ப்பணித்திருக்கிறேன். அப்படி இருக்கும்போது, 10 வருஷம் ஓட்டுநர் உரிமம் ரத்து என்பது ஏதோ நியாயமே இல்லாதது மாதிரி இருக்கிறது. ஏதோ திருத்தனும்ங்கிற மாதிரி இல்லாம, வாழ்க்கையை அழிக்கனும்ங்கற மாதிரி இருந்துச்சு. ஆனால், ஒன்னும் பிரச்னை இல்லை. கொடுத்த புகாரே தப்பா இருக்கு. ஏனென்றால், நான் விபத்துக்குள்ளாகி, மயக்கமாகிவிட்டேன். ஆனால், புகாரில் புதுசு புதுசா எழுதி இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

உங்களைப் பார்த்து காலேஜ்ஜில் இளைஞர்கள் தப்பான முறையில் வாகனங்களை இயக்குகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  “அவர்கள் என்ன தப்பான முறையில் இயக்குகிறார்கள்” என்று பதில் கேள்வி எழுப்பினார். நிறைய சிறுவர்கள் சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுகிறார்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சிறுவர்களிடம் ஏன் பைக் தருகிறீர்கள்? நிறைய பேர் சிறுவர்கள் சூப்பர் பைக் எல்லாம் கேட்கிறார்கள் என்று சொல்வார்கள். நானும்தான்  சின்ன வயசுல எனக்கு சூப்பர் பைக் வேணும்னு சண்டை போட்டேன். நம்மதானே குழந்தைகளை சொல்லி திருத்தணும், கேட்ட உடனே வண்டி வாங்கி தர்றதுல என்ன நியாயம், இந்த ஜெனரேஷன் ரொம்ப ஸ்மார்ட், நீங்க சொல்லுங்க 10வது படிக்கும்போது என்ன பார்த்திருப்பீர்கள், டிவி பார்த்திருப்பீர்கள், உங்களுக்கு இந்த அளவுக்கு மெச்சுரிட்டி இருக்குமா என்று மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள்” என்று செய்தியாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய டி.டி.எஃப். வாசன், இப்போது இருக்கிற 10வது, 12வது, காலேஜ் படிக்கிறவங்க எவ்வளவு மெச்சுரிட்டியோட இருக்காங்க, அவர்கள் தப்பா போகணும்னா இன்னும் பயங்கரமா போகலாம், ஆனால், அவர்கள் போகவில்லை.” என்று கூறினார்.

சிறையில் மருத்துவ வசதிகள், சாப்பாடு எப்படி செய்து கொடுத்தார்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன்,  “அதெல்லாம் நல்லாதான் செய்துகொடுத்தார்கள். உடைந்த கை கோணையாக போய்விட்டது. மறுபடியும் போய் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.” என்று கூறினார்.

சிலர் உங்களுக்கு கையில் அடிபடவே இல்லை என்று கூறுகிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன்,  “அது ஒரு மாதிரியாகிப் போச்சு, ஏற்கெனவே நான் 10-13 மனக் கஷ்டங்களோட உள்ள இருக்கோம். அதற்கு பிறகு, வெளியே இருந்து உள்ள வந்தவர்கள், கை உடையிலனு சொன்னாங்களே என்று கேட்டார்கள். அதனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு, நானே சும்மாதான்பா கட்டியிருக்கிறேன் என்று சொல்ல ஆரம்பிச்சுட்டேன். கை உணையாவே உடைந்துவிட்டது.” என்று கூறினார்.

திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள், அந்த படத்தின் வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன், எங்கள் டைரக்டர் இங்கதான் இருக்கிறார் என்று இயகுனரை அழைத்து அறிமுகப்படுத்தினார்.

இப்போது பைக் ஓட்ட முடியாது, அடுத்து படத்துல கவனம் செலுத்துவீர்களா என்ற என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.எஃப். வாசன்,  “பைக்கும் ஓட்டுவேன், கண்டிபாக படமும் நடிப்பேன். ஃபேஷனை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது இல்லை.” என்று கூறினார். 

லைசன்ஸை ரத்து செய்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு, “இண்டர்நேஷ்னல் லைசென்ஸ் எடுக்கலாம், அப்படி இல்லையென்றால், மேல்முறையீடு செய்யலாம். இந்த கைபோனதைவிட லைசென்ஸ் போனபோதுதான் நான் அப்படியே கண்கலங்கிட்டேன். நான் எல்லாத்துலயுமே உறுதியாதான் இருப்பேன். ஆனால், லைசென்ஸ் போனபோது ரொம்ப வருத்தமாயிடுச்சு.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment