4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி
TTV Dhinakaran : கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள 72 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்
TTV Dhinakaran : கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள 72 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார்
tamil nadu,Puducherry,district secretaries,Dhinakaran,AMMK, Chennai news, Chennai latest news, Chennai news live, Chennai news today தமிழ்நாடு. சென்னை. அமமுக, தினகரன், மாவட்ட செயலாளர்கள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 14 மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அடங்கிய 3வது பட்டியலை கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
Advertisment
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் நியமனம் - முதற்கட்ட பட்டியல்: pic.twitter.com/NLRcf8LlO1
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் - மூன்றாம் பட்டியல் மற்றும் புதுச்சேரி மாநில கழக செயலாளர் நியமனம். pic.twitter.com/tfoMeQ1p9a
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி, நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தினகரன் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் உள்ள 72 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து வருகிறார். அதன்படி திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்டமாக மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார். இதனையடுத்து கடந்த 4 நாட்களில் 57 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாவட்ட செயலாளர்கள் நியமனம் மட்டுமல்லாது, கட்சி தலைமை அலுவலக செயலாளராக கே கே உமாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்த பதவியில் உள்ள ஆர் மனோகரனுடன் இணைந்து செயல்படுவார்
இதுமட்டுமல்லாது கட்சியின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக 6 பேரும், புதுச்சேரி அமமுக செயலாளராக பி வேல்முருகனையும் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.