'நான் அழகாவா இருக்கேன்?' - சுட்டிப் பெண்ணிடம் வெட்கப்பட்ட டிடிவி தினகரன்!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டிலும் பிஸியாக உள்ள நிலையில், அமமுகவுடன் மற்ற கட்சிகள் கூட்டணி வைக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. விரும்பினாலும், சில காரணங்களுக்காக அவர்களால் கூட்டணி வைக்க முடியாத சூழல்.

ஆனாலும், எஸ்டிபிஐ கட்சி சமீபத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதேபோல், பாமகவின் மாநில துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித், அமமுகவில் ஐக்கியமானார்.

இந்த நிலையில், டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறுமியிடம், ‘நான் உண்மையில் அழகா இருக்கிறேனா?’ என்று கிண்டலாய் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் வேனில் இருந்தபடியே ஈடுபட்டிருந்த தினரனை நோக்கி வந்த சுட்டிப் பெண் ஒருவர், ‘சூப்பராவும் இருக்கிங்க, அழகாவும் இருக்கிங்க, சீக்கிரமா CM ஆகுங்க’ என்று சொல்ல, அப்பெண்ணை அருகில் அழைத்த டிடிவி, ‘உண்மையில் நான் அழகா இருக்கேனா?.. சொல்லு’ என்று கேட்க, அந்த இடமே கலகலப்பானது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close