/indian-express-tamil/media/media_files/2025/08/31/ttv-dhinakaran-4-2025-08-31-13-28-56.jpg)
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறினார்.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதைத் தொடந்து, தமிழ்நாட்டில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க - அ.தி.மு.க மீண்டும் கூட்டணி அமைப்பதாக அறிவித்தன.
இதனால், ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த, அ.ம.மு.க கூட்டணியில் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. கடந்த வாரம், அ.ம.மு.க கூட்டணியில் இருக்கிறதா, இல்லையா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளத்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், இதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்தின்தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்று கூறினார்.
அதே நேரத்தில், டிசம்பரில் எங்களுடைய முடிவை அறிவிப்போம் என்று டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முன்னதாக, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓ.பி.எஸ் விலகியதை அடுத்து, டி.டி.வி.தினகரனும் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். அதே போல, என்.டி.ஏ கூட்டணியில் இருந்த தே.மு.தி.க இன்னும் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.