அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நாமக்கல்லில் இன்று (ஜன.10,2024) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிம் பத்திரிகையில் வந்திருந்த செய்தி தொடர்பாக நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த டி.டி.வி. தினகரன், “அதை அந்த செய்தியை எழுதியவரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு, “நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேசிவருகிறோம். கூட்டணி இறுதியான பின்பு முறைப்படி தெரிவிப்போம்” என்றார்.
தொடர்ந்து, “உண்மையான அம்மாவின் (ஜெயலலிதா) தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அ.ம.மு.க.வின் விருப்பம்.
உண்மையான அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்றார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்னும் வரும் மாதங்களில் அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக, பாஜக தனித்தனி அணியாகவும் உள்ளன.
அ.ம.மு.க. மற்றும் தே.மு.தி.க., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
தற்போது தேனி மக்களவை தொகுதியில் எம்.பி.யாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“