Advertisment

"இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு அளிக்க வேண்டும்": டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TTVDhinakaran,two leaves symbol,Election commission,ADMK

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக உடைந்தது. இதையடுத்து, சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் இயங்கியது. இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால், சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிகோரி, சசிகலா சார்பிலும், ஓ.பன்னீர் செல்வம் சார்பிலும் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டன. இரு அணிகள் தரப்பிலும் லட்சக்கணக்கான பக்கங்களில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்ப்பட்டன. ஆனால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. மேலும், அதிமுக என்ற கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். அதன்பின். ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக பெயரையும் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு ஒதுக்கி, கடந்த 23-ஆம் தேதி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அப்போது, "தேர்தல் ஆணையம் பாரபட்சமாக சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்", என அறிவித்தார்.

அதன்படி, தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவை ரத்து செய்து, இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை அவசார வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற டெல்லி உயர்நீதிமன்றம், நாளை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிடிவி தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Two Leaves Symbol Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment