Tamil Nadu News: தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா சிங்கபெருமாள் கோயிலில் தனியார் நிறுவன நிர்வாகியை மிரட்டியதன் சி.சி.டி.வி. கட்சி மக்களின் மத்தியில் பரவி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
எஸ்.ஆர். ராஜாவின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.டி.வி. தினகரன் டுவிட்டரின் மூலம் தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறியதாவது:
“எதற்காக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று வலியுறுத்தினோமோ, அதெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களை மிரட்டுவது, வீடு மற்றும் தொழில் நிறுவனங்களை காலி செய்யச் சொல்லி கட்டப்பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட தி.மு.க.வினரின் அராஜகம், அக்கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகளில் ஆரம்பித்து, சட்டப்பேரவை உறுப்பினர் வரை வந்து நிற்கிறது.
தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ.வின் மிரட்டல் குறித்த ஆதாரம் வெளியான பிறகும் தி.மு.க தலைவர் திரு.ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?” என்று முதல்வரை குறிப்பிட்டு தனது கேள்வியை எழுப்பியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil