scorecardresearch

ராமஜெயம் வழக்கு விவகாரத்தில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் – டி.டி.வி தினகரன்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.

ராமஜெயம் வழக்கு விவகாரத்தில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் – டி.டி.வி தினகரன்

திமுக ஆட்சியில் இல்லாத இந்த பத்தாண்டு காலத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவழித்தவர் கே.என்.நேரு. இதனால்தான் தலைமை அவருக்கு உரிய கௌரவத்தை வழங்கியிருக்கின்றது. அதே நேரம், இந்த 10 ஆண்டுகளில் தனது தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நிம்மதியை இழந்திருக்கின்றார் கே.என்.நேரு என்கின்ற நிலையில் எதிர்வரும் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்துவதில் தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள். தி.மு.க-வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என டி.டி.வி.தினகரன் தெரிவித்திருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கின்றது.

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சென்னையில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டோம். மழை காரணமாக காலம் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்துவிட்டோம். மழை காரணமாகப் பணிகளை முடிக்கவில்லை’ என முதல்வர் உள்ளிட்டவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அதைவிடுத்து, கண்முன்னே குழிதோண்டி வைக்கப்பட்டிருக்கும்போது `80 முதல் 90 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டன’ எனப் பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லியிருக்கலாம். செய்ய முடிந்ததைச் சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவிருப்பது தவறில்லை. அதில் தி.மு.க அரசியல் செய்தால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்துக்குள்ளானது. இதில் தி.மு.க அம்பலப்பட்டுப்போனது. அதேபோல், ராமஜெயம் விவகாரத்தில் அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள்.” என்று கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி தினகரன், “அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் பேரணி நீதிமன்ற உத்தரவுப்படி நடந்திருக்கிறது. வழக்கமாக எப்போதும் இந்தப் பேரணி நடைபெறும். அதனால், அதைப் பற்றி கருத்து தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை.

`ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ, அதுபோல்தான் கவர்னர் பதவியும்’ என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை. அவர் ஓர் அதிகாரிதான். மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசைக் குறை கூறாமல் இழப்பீடு பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

ஸ்டாலினுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. இருவருமே ஆணவத்துடன், அதிகாரத்துடன் செயல்படுகின்றனர். ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால் இருவரின் நடவடிக்கையும் மாறிவிடுகிறது. சரியான நேரத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

தி.மு.க-வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்துக்கொள்வோம். எனவே, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே கூட்டணியில் திரள வேண்டும்” என்று தற்போது அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத்தலைமை பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் ஜெயலலிதா விசுவாசிகள் அனைவரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று டி.டி.வி தினகரன்என சூசகமாக அழைப்பு விடுத்திருக்கின்றார்.

அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளாக கன்னித்தீவு போல் ஒரு கொலை வழக்கில் அதுவும் பிரபலமான தொழிலதிபர், திமுகவின் முக்கியப்புள்ளிகளில் ஒருவர், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இன்று வரை குற்றவாளிகள் யார் என்பதில் ஒருதுறும்பு கூட தெரியாமல் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல் போலீஸ் திணறிக்கொண்டிருக்கின்ற நிலையில், சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சில ரவுடிகளை வட்டமிட்டு காட்டி உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தவிருக்கும் நிலையில் இதில் திமுக ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அசிங்கப்பட்டுதான் போவார்கள் என்று பேசியிருப்பது தற்போது தமிழக அரசியல் களத்திலும், காவல்துறை வட்டாரத்திலும் சூட்டைக் கிளப்பியிருக்கின்றது.

இந்தசூழலில் வரும் 14-ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ராமஜெயம் கேஸ் மீண்டும் வருகின்றது. இதில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி. தலைமையில் 13 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு நீதிபதியின் உத்தரவுக்காக காத்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் ராமஜெயம் குடும்பத்தாரையும் இதில் சேர்க்கவேண்டும், தங்கள் தரப்பு மருத்துவர்கள், வழக்கறிஞர்களையும் உண்மை கண்டறியும் சோதனையின்போது அனுமதிக்கக்கோரி பிரபல ரவுடிகளின் வழக்கறிஞர்களும் நீதிபதியை நாடியிருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ttv dhinakaran comments on dmk govt and ramajayam murder case

Best of Express