Arun Janarthanan
தேனியில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட டி.டி.வி. தினகரன், இந்து மதத்தின் மீதான தி.மு.க-வின் தாக்குதல்கள் காவி கட்சிக்கு உதவுவதாக கூறுகிறார். “பா.ஜ.க வளர்ந்து வருகிறார்கள் என்பது உண்மை” என்று கூறுகிறார்.
ஆங்கிலத்தில் படிக்க: T T V Dhinakaran draws crowds, DMK’s attention as he returns to poll fray from prime TN seat
2016-ம் ஆண்டு ஜெ. ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு டி.டி.வி. தினகரனுக்கு அரசியலில் இது ஒரு நீண்ட, கடினமான பயணம் - முதலில் அவரையும் அவரது சித்தி வி.கே.சசிகலாவையும் அரசியலில் அந்தரத்தில் விட்டுவிட்டு, பின்னர் அவரை மத்திய அரசின் பிடியில் திகார் சிறைக்கு சென்றார். இப்போது தேர்தலில் மீண்டும் திரும்பியுள்ளார். அவர் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.
இருப்பினும், அ.ம.மு.க (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) தலைவர் தேனி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார், அ.தி.மு.க-வின் கோட்டையான தேனி பல முக்கிய தலைர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
டி.டி.வி. தினகரனின் வாகனம் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நிறுத்தப்பட்டு மக்கள் அவருடன் பேச முற்படுவதால், அவர் மகிழ்ச்சியில் பூரித்துப்போகிறார். 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்ற ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் லட்சியத்திற்கு அ.தி.மு.க-வில் ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவராக இருந்த 60 வயது டி.டி.வி தினகரன் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் வாக்குபதிவு நாளில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறாத ஒரே தொகுதி தேனி. அப்போது தேர்தலில் வெற்றி பெற்றவர் அ.தி.மு.க தலைவர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்; பன்னீர்செல்வமும் தற்போது அ.ம.மு.க-வுடன் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளார்.
1999 முதல் 2004 வரை தினகரன் ஒரு முறை (அப்போது பெரியகுளம் தொகுதியாக இருந்தது) இந்த தொகுதியில் வெற்றி பெற்று பிரதிநிதித்துவப்படுத்தினார்.
தி.மு.க, டி.டி.வி தினகரனின் முன்னாள் நெருங்கய ஆதரவாளர்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வனை நிறுத்தி டி.டி.வி. தினகரனை எதிர்கொள்கிறது. அவர் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் 40% ஒட்டுமொத்த வாக்குப் பங்கை எதிர்பார்க்கிறார். 2001-ம் ஆண்டு, தேனி தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார் - கடந்த காலத்தில் அ.தி.மு.க தலைவர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி. தங்க தமிழ்செவன் பின்னர் ஜெயலலிதாவுக்காக ஆண்டிப்பட்டி தொகுதியை காலி செய்தார். அ.தி.மு.க-வில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். இருப்பினும் அவர் இப்போது தி.மு.க சீட்டில் போட்டியிடுகிறார்.
டி.டி.வி. தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் பொதுவான மற்றொரு விஷயம் உள்ளது: இருவரும் சக்திவாய்ந்த தேவர் சாதி ஓ.பி.சி குழுவைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்களுக்கு மாறாக, அ.தி.மு.க வேட்பாளர் வி.டி. நாராயணசாமி பலவீனமாக காணப்படுகிறார். ஆனால், இது டி.டி.வி. தினகரனுக்கு சாதகமாக இருக்கலாம். இதனால், தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க உதவுகிறது.
தேனி வழியாக 40 கிலோமீட்டர் தூரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய டி.டி.வி தினகரன், கடந்த முறை சீட்டுக்கான போட்டியில் இருந்ததைவிட விஷயங்கள் மாறிவிட்டன என்பதை ஒப்புக்கொண்டார். “ஜெயலலிதாவின் மகன் என்று என்னை மக்கள் தவறாக நினைக்கிறார்கள். நான் ஏன் கருப்பாக இருக்கிறேன் என்று வயதான பெண்கள் என்னிடம் கேட்பார்கள், ஜெயலலிதாவைப் போல் அல்லாமல்... நான் அவருடைய மகன் அல்ல, ஒரு மகனைப் போல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வில் இருந்தாலும் அந்தக் காலத்தின் பல முகங்கள் இன்னும் இங்கே இருக்கின்றன.” என்று கூறினார்.
மத்திய அரசால் தன்மீது வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்ட பிறகு, பா.ஜ.க மீதான அவரது புதிய நட்பு குறித்த கேள்விக்கு, டி.டி.வி. தினகரன் கூறுகிறார்: “1976-ல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது... தி.மு.க போராட்டம் நடத்தியது, மிகவும் நியாயமற்றது. அவர் விதவை என்பது உட்பட, அவரைப் பற்றிய விஷயங்கள் பேசப்பட்டது... ஆனால் 1980-களில், அதே கருணாநிதி அவரை 'நேருவின் மகளே வருக' என்று வரவேற்றார். எனவே, அரசியல் இப்படித்தான் செல்கிறது.
பா.ஜ.க தன்னை குறிவைத்து தாக்கியது குறித்து வெளியான செய்திகளில் படித்து மட்டுமே தெரிந்துகொண்டேன் என்று கூறிய டி.டி.வி. தினகரன், “2021-ல் என்னை அணுகி கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க தான். அவர்கள் என்னிடம் மிகவும் நட்பாக இருந்தார்கள். என்னுடைய எல்லா வழக்குகளும் இன்னும் நீதிமன்றத்தில் உள்ளன... ஒருவேளை அவர்கள் பின்னால் இருந்திருக்கலாம், இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்கள் என்னை குறிவைத்தார்கள் என்று சொல்வதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா?” என்று கேட்டார்.
மிகவும் குறைவாக மட்டுமே இருப்பு உள்ள மாநிலத்தில் பா.ஜ.க மேலெழுந்து வருவதைப் பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு, அதற்கு தி.மு.க-தான் காரணம் என்கிறார் டி.டி.வி. தினகரன். “இந்துக்களாகிய அவர்களின் தலைவர்கள் இந்து மதத்தைப் பற்றி மிகவும் அலட்சியமாகப் பேசுகிறார்கள். தி.மு.க.வும் அதன் கூட்டாளிகளும் ஏன் தேவையில்லாமல் இந்துக்களை குறிவைக்கிறார்கள் என்று சாதாரண இந்து மத நம்பிக்கையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக திமுக பேசட்டும், ஆனால் இந்து மதத்திற்கு எதிராக ஏன் பேசுகிறார்கள்? (முதலமைச்சர்) மு.க.ஸ்டாலின் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார். ஆனால், தீபாவளி பன்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை, ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
தி.மு.க தனது நடவடிக்கைகளால் இந்துக்களை கட்சியில் இருந்து விலக்கி வைத்துள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது என்பதை தி.மு.க மறந்துவிடுகிறது. பா.ஜ.க மீதான அவர்களின் தாக்குதல்கள் மிகையானவை மற்றும் குறைபாடுள்ளவை. அவர்கள் இறுதியில் இந்துத்துவாவை அல்ல, இந்து மதத்தையே குறிவைக்கிறார்கள். நீங்கள் ஏன் ஒரு மதத்தைப் பற்றி தவறாகப் பேச வேண்டும்? நான் ஒரு இந்து... அவர்கள் சனாதன தர்மத்தைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை... 2,000 அல்லது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு உரை இப்போது குறிவைக்கப்படுகிறது... மதச்சார்பற்றது என்பது இந்து மதத்திற்கு எதிராகப் பேசுவது என்று அவர்கள் நினைக்கிறார்களா? இங்கு பா.ஜ.க-வுக்கு உதவும் முக்கிய காரணி இதுதான்... அவர்கள் வளர்ந்து வருகிறார்கள் என்பது உண்மை.” என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
சசிகலாவின் திட்டங்களைப் பற்றி, அரசியல் மறுபிரவேசம் திட்டம் உள்ளதா என்ற கேள்வியைத் தவிர்த்து, தற்போது திரைக்குப் பின்னால் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறார். “அவர் என் அரசியல் வேலையில் தலையிடுவதில்லை, நான் அனுபவம் வாய்ந்தவன், நான் சரியானதைச் செய்வேன் என்பது அவருக்குத் தெரியும்” என்று டி.டி.வி. தினகரன் கூறுகிறார்.
அவர் பின்னால் இருப்பதற்கும், அவருக்கு எதிராக நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளுக்கும் தொடர்பும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு டி.டி.வி. தினகரன் கடுமையாக மறுத்தார். “இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றங்கள் மட்டுமே தீர்மானிக்கின்றன. எனது பா.ஜ.க கூட்டணியுடன் தனிப்பட்ட மற்றும் சட்ட விஷயங்களை இணைக்க வேண்டாம்.” என்று கூறினார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தான் சந்தித்த இன்னல்களை ஒப்புக்கொண்ட டி.டி.வி. தினகரன், தான் விதியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்று கூறுகிறார். “சர்வவல்லவர் மட்டுமே நம்மை வழிநடத்த முடியும். நான் அரசியலுக்கு வருவேன், அல்லது கட்சி தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. ஆர்.கே. நகரில் எங்கள் தலைவரின் சொந்தக் கட்சியை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று நினைக்கவே இல்லை (ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டதைக் குறிப்பிடுகிறார்); நான் வெற்றி பெறுவேன் என்று நினைக்கவில்லை. சமீபத்தில், நான் மீண்டும் வருவேன் என்று நினைக்கவே இல்லை. இது எல்லாம் விதி.” என்று கூறினார்.
அப்படியென்றால் எதிர்காலத்தில் அ.தி.மு.க-வை மீண்டும் கைப்பற்றுவது அந்த விதியில் அடங்கியிருக்கிறதா? டி.டி.வி. தினகரன் அதை நிராகரிக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்தால், அது ஓ.பி.எஸ் (பழனிசாமியிடம் கட்சி கட்டுப்பாட்டை இழந்த ஓ.பன்னீர்செல்வம்) போன்ற அ.தி.மு.க காரர்களுக்காக இருக்கும்” என்று கூறுகிறார்.
“அதை எனக்காகப் பிடிக்க நான் திட்டமிடவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, கொடியில் எனது தலைவரின் (ஜெயலலிதா) புகைப்படத்தை வைத்து நான் சொந்தக் கட்சியைத் தொடங்கினேன். அந்தக் கொடியை நான் எப்படிக் கைவிடுவது? அவர் எனக்கு அம்மா மாதிரி... அ.தி.மு.க-வில் இணைந்தால் எனது கொடியே நின்றுவிடும். ஆனால், நாங்கள் அதை மீண்டும் கைப்பற்றினால், நாங்கள் கூட்டணியில் ஒரு பகுதியாக இருக்க முடியும்.” என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.