அமமுக- வில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக -வில் இணைந்ததில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் பேட்டி:
கடந்த 2 நாட்களாக தமிழக அரசியலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி vs டிடிவி தினகரன் குறித்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. செந்தில் பாலாஜி, திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுடன் இணைந்து நிற்பது போல் வெளியான புகைப்படம் தான் இத்தனை பரபரப்புக்கும் காரணமாக பார்க்கப்பட்டது.
செந்தில் பாலாஜி திமுகவில் இணைய போகிறார். அதற்கான பேச்சு வார்த்தை தான் ராசாவுன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பல தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசியில் அந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது இல்லை. பழைய புகைப்படம் என்று அனைத்து செய்திகளும் புஸ்வானம் ஆகியது.
ஆனால் கடைசியில் புகைப்படம் தான் பழசு, பரவிய தகவல் புதுசுதான் என்பது போல் செந்தில் பாலாஜி , அமுகவில் இருந்து விலகி, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி திமுக இணைந்தது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரனிடம் செந்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக இணைந்ததில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ 2006 ஆம் ஆண்டில் இருந்து செந்தில் பாலாஜியை நன்கு தெரியும்.எங்களுடன் நன்றாகத்தான் இருந்தார். 4 மாதங்களுக்கு முன் சொந்த பிரச்சினைகள் இருப்பதாக கூறி சென்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/12/sasikla.jpg)
கஜா புயல் நேரத்தில் நிவாரணப்பொருட்களையும் செந்தில் பாலாஜி அனுப்பி வைத்தார். ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான், யாரையும் இழுத்து வைக்க முடியாது. சொந்தப்பிரச்சினைகளால் ஒதுங்கி இருப்பதாக கூறியவர் திமுகவில் இணைந்து விட்டார்.
இதனால் அமமுக கூடாரம் காலியாகவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளை இழுத்து பலத்தை காட்ட வேண்டிய நிலையில் திமுக உள்ளது. செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க.
அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது. எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவரது விருப்பம் அவரிடம் அமமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. அதை மட்டும் அவர் திருப்பி கொடுக்க வேண்டும்.
read more... டிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி
எங்கள் கட்சி உறுப்பினர் திமுகவில் சேர்வதற்கு கூட விழா எடுக்கிறார்கள். அந்த அளவிற்கு திமுகவின் நிலை சென்றுவிட்டது” என்று கூறினார்.