நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்: டி.டி.வி தினகரன் பேட்டி

"தமிழ்நாட்டில மூன்றாவது, நான்காவது அணி அமையலாம், அதற்கு வாய்ப்புள்ளதாக தான் நான் கூறினேன். அமையும் என கூறவில்லை. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்." என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

"தமிழ்நாட்டில மூன்றாவது, நான்காவது அணி அமையலாம், அதற்கு வாய்ப்புள்ளதாக தான் நான் கூறினேன். அமையும் என கூறவில்லை. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்." என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
TTV Dhinakaran NDA Alliance ADMK DMK EPS OPS Trichy press meet Tamil News

"செந்தில் பாலாஜி வழக்கில் அவர் அம்பு தான். அதை எய்தவர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என அனைத்து நடவடிக்கைகள எடுத்து வருகிறார்கள். தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றியவர்கள்." என்று டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.

திருச்சி அ.ம.மு.க ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி திருவானைக்காவல் பகுதியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன் பேசியதாவது:- 

Advertisment

செந்தில் பாலாஜி வழக்கில் அவர் அம்பு தான். அதை எய்தவர்கள் மாட்டிக்கொள்ள கூடாது என அனைத்து நடவடிக்கைகள எடுத்து வருகிறார்கள். தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றியவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். மக்கள் தான் அதற்கு தக்க பதிலடி தர வேண்டும்.

தமிழ்நாட்டில மூன்றாவது, நான்காவது அணி அமையலாம், அதற்கு வாய்ப்புள்ளதாக தான் நான் கூறினேன். அமையும் என கூறவில்லை. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதில் எந்த முரண்பாடும் இல்லை.
மோடி பிரதமராக வேண்டும் என 2024 ல் உருவாக்கப்பட்ட கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி. அதில் நாங்கள், ஓ.பன்னீர்செல்வம் இணைந்தோம். தற்போது அதில் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து கூட்டணி குறித்து புது அர்த்தம் தருகிறார். வார்த்தையில் ஜாலம் செய்கிறார். ஆனால் நாங்கள் எதார்த்தத்தை கூறுகிறோம்.

தமிழ்நாட்டின் மக்களுக்கு எதிரான விவகாரங்களுக்கு குரல் கொடுக்கலாம். ஏற்கனவே டங்ஸ்டன் விவகாரத்திலும் அனைவரும் குரல் கொடுத்தோம். ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டதை வைத்து ஊடகங்கள் எழுதும் பொழிப்புரைக்கு நான் பதில் கூற முடியாது.
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்காத விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. மூன்றாவது மொழியை தமிழ்நாட்டில கொண்டு வருவது தான் புதிய கல்வி கொள்கை. இந்தி என எதிலும் குறிப்பிடவில்லை. மூன்றாவதாக ஒரு மொழி படிப்பதும் நல்லது தான். குறிப்பிட்ட மொழியை தான் படிக்க வேண்டும் என மத்திய அரசு திணித்தால் அதை நாங்கள் எதிர்ப்போம் அதற்கான திட்டத்தில்  நிதி வேண்டுமென்றால் அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும்.

Advertisment
Advertisements

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்த பின்பு அ.ம.மு.க இருப்பிற்கு எந்த ஆபத்தும் வரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி பலப்பட்டுள்ளது. தி.மு.க விற்கு தான் ஆபத்து வந்துள்ளது. எங்களின் ஒரே குறிக்கோள் திமுக வை வீழ்த்த வேண்டும் என்பது தான். அமித்ஷாவின் அந்த முயற்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.

அ.தி.மு.க தலைமைக்கும் எங்களுக்கு எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால், அதையெல்லாம் தேர்தல் வரை ஒதுக்கி வைத்து விட்டு தி.மு.க-வை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். எங்களால் தி.மு.க ஆட்சிக்கு வந்தது என பல அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். அமித்ஷாவின் முயற்சிக்கு எந்த பங்கமும் வரக்கூடாது என வார்த்தைகள் விடாமல் நாங்கள் நாகரிகமான முறையில் கூட்டணி பலப்பட வேண்டும் என விரும்புகிறோம். 

தமிழ்நாட்டில் ஜாதி சண்டைகளும், ஆணவ படுகொலைகளும் அதிகமாகி உள்ளது. விடுதிகளின் பெயரை மட்டும் மாற்றினால் போதாது, மக்களின் உள்ளங்களில் மாற்றம் வர வேண்டும்.  டிசம்பரில் எல்லா கூட்டணிகளும் உருப்பெற்று விடும் அந்த நேரத்தில் நானே கூட்டணி குறித்து பதில் அளிக்கிறேன். எங்கள் கட்சியின் தகுதியுள்ள நபர்கள் அனைவரும் நிச்சயம் போட்டியிடுவார்கள். தி.மு.க ஆட்சி மீது கடுமையான கோபம் மக்களிடம் இருப்பதால் பயந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் என கூறுகிறார். தற்போது யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை கொடுக்கிறார்களோ, விடுப்பட்ட மாதங்களுக்கும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நியாயமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தேசிய ஜன நாயக கூட்டணியின் தலைமை யார் என்பது குறித்து அமித்ஷா என்ன பதில் கூறினாரோ அது தான் என் பதிலும். தமிழகம் வந்த பிரதமரை சந்திக்க நாங்கள் அனுமதி கேட்கவில்லை

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் மற்றும் அமமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Trichy Ttv Dhinakaran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: