மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “அவர் மதுரைக்கு வரும் நேரத்தில், நான் திருச்சியில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்வில் பங்கேற்கும் நிலையில் இருக்கிறேன். எனவே, சந்திப்பது சாத்தியமில்லை. திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு இருப்பதால், அமைதியாக இருக்கிறேன்” என்றார்.
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைந்திருப்பது குறித்து பேசும் போது, “திமுக அரசை வீழ்த்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அதிமுக NDA-வில் இணைந்திருப்பது மகிழ்ச்சியானது,” எனக் கூறினார்.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு NDA-வில் முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த தினகரன், “அவர் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கியத்துவம் பெற்றே நடந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.