ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி வி தினகரன் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அடுத்த வாரம் தள்ளிவைப்பு.
இது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த என்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். இந்த தேர்தலில் சுயேட்சை உறுப்பினராக குட்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். இடைத் தேர்தலில் நூதன முறையில் பணம் பட்டுவாடா நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது. முறைகேடாக டி.டி.வி. தினகரன் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளித்து. அனைத்து தேர்தல் விதிமுறை மீறல் செய்து அவர் பெற்றி பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவில் சில குறைபாடுகள் இருந்ததால் அதை சரி செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.