டிடிவி தினகரன் மகள் திருமணம் நிச்சய விழா: காங்கிரஸ் நிர்வாகியை மணக்கிறார்

TTV Dinakaran : சசிகலா காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல தொடர்புடையவர். டி.டி.வி.தினகரனும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் நல்ல நட்பில் உள்ளார்.

By: Updated: July 26, 2020, 10:55:18 AM

டி.டி.வி.தினகரன் விரைவில் மாமனார் ஆகப்போகிறார். அவரது ஒரே மகள் ஜெயஹரிணிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி.தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் முன்னாள் காங்கிரஸ் எம்.பி (1991-1996)துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது டி.டி.வி.தினகரன், சசிகலா வந்த பிறகு அவரது தலைமையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.ஆகஸ்ட் மாதம் சசிகலா சிறையில் இருந்து வெளிவரலாம் என அவரது உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். சசிகலா ரிலீசாக முன்பின் தாமதமானாலும் எப்படியும் ஜனவரிக்குள் வந்து விடுவார் என்பதால் திருமணத்தை ஜனவரி மாதம் தஞ்சையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சசிகலா காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல தொடர்புடையவர். டி.டி.வி.தினகரனும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் நல்ல நட்பில் உள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும் ஜனவரி மாதத்திற்குள் சசிகலா நடராஜன் தலைமையில் திருமணத்தை நடத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ttv dinakaran sasikala krishnasamy vandayar daughter engagement house function ammk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X