scorecardresearch

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா காப்பாற்றிய கட்சி… சிலர் ஆணவத்தால் சிக்கித் தவிக்கிறது – டிடிவி தினகரன்

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் கட்டி காப்பாற்றிய கட்சியை ஒரு சிலரின் ஆணவம் – பதவி வெறியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran, AMMK, AIADMK, MGR, Jayalalitha, Tamilnadu, India, Latest Tamil news

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்தினார்.

தொண்டர்களுடன் வந்த டி.டி.வி தினகரன் அண்ணா உள்ளிட்ட தலைவருக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்.

அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம்.

மேலும் இன்னொரு கட்சியான (அதிமுக)வில் நடக்கும் கூத்தை பற்றி பதில்சொல்ல வேண்டியதில்லை என தெரிவித்தார்.

மேலும் அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது.

தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர் எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிகாத்த இயக்கம் இது எனவும்.

ஒரு சிலரின் ஆணவத்தால் ,பதவி வெறியால், சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது.

இதற்கு காலம் பதில் சொல்லும் எனவும்

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை.

திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது.
துன்பபடுத்துவதுதான் திராவிட மாடல் என்பதை திமுக நிருபித்து வருகின்றது.

இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள்.

மேலும் எந்த மொழியையும், எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யை குறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர்.

இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.

வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது என கூறிய அவர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம் முறைகேடுகளை அனுமதிக்க மட்னோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது.

நீட் தேர்வு ரத்து ,ஆயிரம் ருபாய், சொத்து வரி குறைப்பு என பல வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை. திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள உணர்கின்றனர்.

எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும்,அண்ணா, பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ttv dhinakaran says mgr and jayalalitha saved the party now stuck because arrogance of some people

Best of Express