scorecardresearch

ஓ.பி.எஸ் அன்று கோபத்தில் முடிவு எடுத்தார் – டி.டி.வி தினகரன்

முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அன்று தனக்கு எதிராக கோபத்தில் முடிவெடுத்தார் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran, AMMK, OPS, Jayalalitha, AIADMK, ஓ.பி.எஸ் அன்று கோபத்தில் முடிவு எடுத்தார், டி.டி.வி தினகரன், அமமுக, TTV Dhinakaran interview, O Panneerselvam
டி.டி.வி தினகரன்

முன்னால் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அன்று தனக்கு எதிராக கோபத்தில் முடிவெடுத்தார் என்று அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தந்தி தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில், ஓ.பி.எஸ் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட குடும்பம் என்று கூறியுள்ளார். இவர்கள் குடும்பத்தினர் யாரும் வரக்கூடாது என்று தர்ம யுத்தம் நடத்தினார். ஆனால், அவர் இன்று அப்படியே மாறி உங்களை சந்திக்கிறார் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது என்ற நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு, டி.டி.வி தினகரன் பதில் அளித்துள்ளார்.

அது விமர்சனம் செய்கிறவர்களின் மனநிலை பொறுத்தது. எளிதான பதில், அது அவர்களுக்கே தெரியும். அம்மாவால் ஒதுக்கப்பட்ட குடும்பம் என்பது உண்மை, எங்கள் சித்தியைத் தவிர வேறு யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்று எங்களை எல்லாம் அம்மா (ஜெயலலிதா) நீக்கியது உண்மை. எங்கள் சித்தி ஜெயிலுக்கு போற அன்றைக்கு எடப்பாடி உள்பட அனைவரும் சேர்ந்துதான், என்னை துணை பொதுச்செயலாளராக ஆக்குவது என்று முடிவெடுத்தது. அம்மா (ஜெயலலிதா) இருந்த காலத்தில் இந்த குடும்பம் வேண்டாம் என்று முடிவெடுத்தது உண்மைதான். அம்மா (ஜெயலலிதா) மறைவுக்குப் பிறகு, திரும்ப வேண்டும் என்று இவர்கள் எல்லாம் முடிவெடுத்தார்கள். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் அன்றைக்கு மனஸ்தாபத்தில் கோபத்தில் அப்படி ஒரு ஸ்டேண்ட் எடுத்தது உண்மை. பன்னீர்செல்வம் அரசியலுக்காக பேசுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது ரொம்ப நாள் நிற்காது, அவர்களுடன் சேர்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ttv dhinakaran says o panneerselvam took decision in anger for the day