scorecardresearch

புத்தாண்டு கொண்டாட்டம்; சைலேந்திர பாபு – சேகர் பாபு முரண்பட்ட அறிக்கைகள்: டி.டி.வி தாக்கு

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!” என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம்; சைலேந்திர பாபு – சேகர் பாபு முரண்பட்ட அறிக்கைகள்: டி.டி.வி தாக்கு

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கத்தில், தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கிறார். ஆனால், அதற்கு முரணாக அமைச்சர் சேகர் பாபு, அதே நாளில் நள்ளிரவு 12 மணிக்கும் மே மக்கள் கோயில்களில் தரிசனம் செய்யலாம் என்று கூறுகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்தார்.

இந்த நிலையில்தான், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு, சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கிறார் என்றால் அதற்கு முரணாக அமைச்சர் சேகர் பாபுவின் அறிவிப்பு உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நாளை (31.12.2021) இரவு 12.00 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்கு டி.ஜி.பி தடை விதிக்கிறார் ; அதே நாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோயில்களில் மக்கள் தரிசனம் செய்யலாம் என அறநிலைத்துறை அமைச்சர் சொல்கிறார்.

இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர முடியாது என்கிறார் தமிழக நிதியமைச்சர் ; நிதியமைச்சர் கூறுவது அவரது தனிப்பட்ட கருத்து என்கிறார் ஆளும் தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத்தலைவர்!

தமிழக அரசு நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது? குளறுபடிகளின் உச்சமாக இருந்த பழனிசாமி கம்பெனியின் நிர்வாகத்திற்கும் இப்போதைய ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை!” என்று கடுமையாக சாடியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ttv dhinakaran slams dmk govt for minister sekar babu contradict statement with dgp sylendra babu