/indian-express-tamil/media/media_files/o1Yh0hOVFntYlXqyeHQg.jpg)
டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
TTV Dhinakaran | Anuradha Dhinakaran | Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார். தொகுதி முழுதும் சுற்றுப்பயண செய்து பரபரப்பு பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், " குக்குர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு. அதனால அவரை பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு குக்கர் நியாபகம் வரணும்.
குக்கர் சின்னம் எல்லாம் இடத்திற்கும் தெரிய வேண்டும். டி.டி.வி தினகரனின் சின்னம் குக்கர் சின்னம். குக்கர் சின்னத்தில் குழப்பம் இல்லாமல் ஓட்டு போடுவதற்கு வயதானவர்களுக்கு எடுத்து கூறவேண்டும். அவர் இதை செய்வார் அதை செய்வார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால், என்னைவிட உங்களுக்கு நல்லாவே தெரியும். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளது.
அவர் உங்கள் வீட்டு பிள்ளை. உங்கள் வீட்டில் ஒருவராய் இருந்திருக்கிறார். குக்கர் சின்னம் ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோது வெற்றிபெற்ற சின்னம். அதேமாதிரி தேனி தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வைக்க வேண்டும். குக்கர் சின்னத்திற்கு அளிக்கும் ஓட்டு, தேனி தொகுதி வளர்ச்சிக்கான ஓட்டு. குக்கர் என்றால் டிடிவி.. டிடிவி என்றால் குக்கர்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.