/tamil-ie/media/media_files/uploads/2021/09/TTV-Dhinakaran-2.jpg)
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தனது மகள் திருமணத்துக்கு தனது மகளின் திருமணத்துக்கு அமமுகவினருக்கு அழைப்பு இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்.
தமிழக அரசியலில் அரசியல்வாதிகளின் இல்லத் திருமணங்கள்தான் பல கூட்டணிகளையும் பல அரசியல் திருப்பங்களையும் நடப்பதற்கான இடமாக இருந்து வருகிறது. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணம் தமிழக அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படுவதற்கான தொடக்கமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்களால் பேசப்பட்டது. ஏனென்றால், அண்மையில்தான், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவும் டி.டிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடைய மனைவியின் மறைவுக்கு ஆறுதல் கூறினார்கள். ஓ.பி.எஸ்-ஸும் சசிகலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் பேசினார். பல அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் சசிகலாவுக்கு தங்களின் வணக்கங்களை தெரிவித்தனர். இதனால், அமமுக தொண்டர்கள் இது அதிமுக தலைவர்களின் ஒன்றிணைவு என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.
இந்த சூழலில்தான், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமணத்தில் சசிகலா மற்றும் அதிமுகவினர் மட்டுமல்லாமல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வார்கள். அதிமுகவில் தலைவர்களின் ஒன்றிணைவுக்கான தொடக்கம் நிகழும் என்று அரசியல் நோக்கர்கள் மத்தியில் பேசப்பட்டது.
இந்த நிலையில்தான், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், கொரோனா பேரிடர் காரணமாக தனது மகள் ஜெயஹரிணி திருமணத்துக்கு அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு... pic.twitter.com/elolVgfNfA
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 12, 2021
இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ‘நம் வீட்டு மணமக்களை நலம் சூழ வாழ்த்துங்கள்’ என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரன்புக்குரிய கழக உடன்பிறப்புகளுக்கு அரசியல் இயக்கம் என்பதை தாண்டி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் என்ற இடத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பாசப்பிணைப்பு நமக்குள் எப்போதும் இருக்கிறது என் மீது நீங்கள் காட்டுகிற அளவிடமுடியாத அன்பும் உங்கள் மீது எனக்குள்ள அசைக்கமுடியாத மற்றும் அதற்கான சாட்சி.
அத்தகைய கழகம் என்னும் நம்முடைய அன்பு குடும்பத்தின் மகிழ்ச்சி விழாவாக என் அன்பு மகள் ஜெயஹரினிக்கும் பூண்டி வாண்டையார் குடும்பத்தின் இளவல் கே.ராமநாத துளசி வாண்டையாருக்கும் வருகிற 16.09.2021 வியாழக்கிழமை அன்று திருவண்ணாமலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது.
தாங்கல் அனைவரும் குடும்பத்தினரோடு வந்திருந்து திருமணத்தை நடத்திட வேண்டும் என்பதே எனது பெரும் விருப்பம். எனினும் கொரோனா பேரிடர் பாதிப்பு இன்னும் முழுமையாக விலகாத நிலையில் உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் தங்கள் அனைவரின் முன்னிலையில் திருமண விழாவை நடத்திட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இல்லறம் ஏற்கும் மனமக்கள் பல்லாண்டு காலம் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட தங்களின் மனப்பூர்வமான அன்பையு இதயம் நிறைந்த வாழ்த்துகளையும் தந்திட வேண்டுகிறேன். இறையருளால் கொரோனா சூழல் மாறியவுடன் நல்விருந்து ஒன்றில் நாம் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், கொரோனா பேரிடர் காரணமாக தனது மகள் ஜெயஹரிணி திருமணத்துக்கு அமமுக தொண்டர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார் தெரியவந்துள்ளது. மேலும், கொரோனா சூழல் மாறியதும் ஒரு நல்விருந்தில் சந்திப்போம் என்று தொண்டர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.