டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா; சசிகலா – ஓ.பி.எஸ் சகோதரர் பங்கேற்பு

அமமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் திருமண வரவேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு #நம்ம வீட்டு கல்யாணம் என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர்.

TTV Dhinakaran's daughter marriage reception, TTV Dhinakaran, Sasikala participates in ttv dhinakaran home functions, டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா, அமமுக, அதிமுக, சசிகலா, ஓ.பி.எஸ் சகோதரர் ஓ ராஜா பங்கேற்பு, OPS' brother O Raja participates in ttv dhinakaran home functions, AMMK, AIADMK, Tamilnadu politics, tamil news

தஞ்சை அருகே பூண்டியில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற, டிடிவி தினகரன் – கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழாவில், வி.கே.சசிகலா மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் சகோதரர் ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி துளசி வாண்டையார் பேரனும் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் கடந்த செப்டம்பரில் திருவண்ணாமலை கோயிலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதையடுத்து, டிடிவி தினகரன் – கிருஷ்ணசாமி வாண்டையார் இல்ல திருமண வரவேற்பு விழா தஞ்சை, பூண்டியில் உள்ள கல்லூரியில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சசிகலா பங்கேற்பார் என்று முன்னதாகவே தகவல் வெளியாகி இருந்தது.

அதிமுக பொன்விழா தொடக்க நாளில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்து வைத்தார். பின்னர், ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அதிமுகவை ஒன்றிணைக்க அழைப்பு விடுத்தார். தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை கட்சியில் மீண்டும் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமையும் உயர்மட்ட நிர்வாகிகளும் முடிவெடுப்பார்கள் என்று கூறியதை அடுத்து அதிமுகவில் ஓ.பி.எஸ்ஸின் பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. அதிமுகவில் சசிகலா மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக விவாதங்கள் நடந்து வருகிறது.

இந்த நிலையில்தான், சசிகலா இன்று சென்னையில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் புறப்பட்டு தஞ்சை அருகே பூண்டியில் நடைபெற்ற டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டர். திரளான அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் திரண்டு சசிகலாவை வரவேற்றனர். சசிகலா மணமக்களை வாழ்த்தினார்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த சசிகலாவை அவருடைய சகோதரின் மகன் டிடிவி தினகரன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு பேசினார். அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. அமமுக மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் திருமண வரவேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு #நம்ம வீட்டு கல்யாணம் என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்தனர்.

திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற சசிகலா பின்னர், அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து பேசினார். வயலில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களை சந்தித்துப் பேசினார்.

டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு விழாவில், யாரும் எதிர்பாராதவிதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். தனது மகளின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்திருந்த ஓ.ராஜாவை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்றார்.

டிடிவி தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ttv dhinakarans daughter marriage reception sasikala and ops brother participates

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express